
Monday, August 29
தீபாவளி திருநாளில் இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம்..!
2:06:00 AM
No comments
தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீசாகின்றன. விஜய் நடிக்கும் “வேலாயுதம்” படம் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நாயகிகளாக ஹன்சிகா, ஜெனிலியா நடித்துள்ளனர். ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
இதன் பாடல் சி.டி. வெளியிட்டு விழாவை மதுரையில் ரசிகர்களை அழைத்து நடத்தி உள்ளனர். இப்படத்தில் விஜய் பால்காரர் கெட்டப்பில் வருகிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
சூர்யா நடித்த 7ஆம் அறிவு படமும் தீபாவளிக்கு வருகிறது. இதில் கமல் மகள் ஸ்ருதி நாயகியாக
நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார். சூர்யா, ஏ.ஆர்.கூட்டணியில் வந்த கஜினி படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. 7ஆம் அறிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
தரணி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி படம் தீபாவளிக்கு வருகிறது. படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மயக்கம் என்ன படமும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகிறது.
இதுபோல் பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் வெடி படமும் தீபாவளிக்கு வருகிறது. அதிகமான தியேட்டர்களை இப்படங்கள் ஆக்கிரமிக்கும் என்பதால் சிறு பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வராது என கூறப்படுகிறது. அவை ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment