'வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
ஏழாம் அறிவு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் என அனைத்து முடிந்து படம் தயாராவதற்கும், விஜய்யும் வேலாயுதம் பணிகள், நண்பன் பணிகள் என அனைத்து பணிகளையும் முடித்து விட்டு வருவதற்கு சரியாக இருக்கும் என்பதால் இருவரும் இணைகிறார்கள்.
இப்படம் விஜய்யின் ரசிகர்களுக்கு ஏற்றபடியும், ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதை என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது. விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
படத்தின் நாயகி யார் என்பது இதுவரை முடிவாகவில்லை.
ஏ.ஆர்.முருகாதஸ் படத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்படலாம் என்கிறார்கள்.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம்.
Thursday, August 4
அப்பா தயாரிப்பில் விஜய் !
3:05:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment