இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, August 9

பிறந்த நாளை அசத்தும் ஹன்சிகா !


தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா. ஹன்சிகா இன்று (ஆகஸ்ட் 9 )தனது 20வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

'மாப்பிள்ளை', 'எங்கேயும் காதல்' ஆகிய படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், விஜய்க்கு ஜோடியாக 'வேலாயுதம்' படத்திலும், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

ஹன்சிகா 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படக்குழுவினருடன் தன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

தனது 20வது பிறந்த நாளில், மும்பையில் தான் வசித்து வரும் குடியிருப்பின் LIFT OPERATOR-ன் மகனை இன்று தத்து எடுக்கிறார் ஹன்சிகா. இதுவரை 19 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று இருக்கிறாராம்.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அந்த குழந்தைகளுடன் ஊர் சுற்றுவது தான் இவரின் பொழுதுபோக்கு.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...