இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, April 27

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா

வேலாயுதம் படத்தில் எத்தனையை ஹைலைட்டான விஷயங்கள் இருக்க அதில் ஹன்சிகா மோத்வானி, விஜய்க்கு கொடுத்துள்ள ஒரு சின்ன முத்தக் காட்சி கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு இரண்டு நாயகிகள், ரூ. 2 கோடி செலவில் ஒரு பாடல் காட்சி, பிரமாண்டமான சண்டைக் காட்சி, ஓட்டப் பந்தயக் காட்சி என ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் உள்ளன வேலாயுதத்தில்.

அதேசமயம், அதை விட சூப்பர் ஹிட்டாக பேசப்படுவது ஹன்சிகா கொடுத்துள்ள முத்தம்தான். இப்படத்தில் விஜய்க்கு படு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம் ஹன்சிகா. அதாவது விஜய்யின் உதடுகளுக்கு வெகு நெருக்கமாக வந்து முத்தமிடுவது போல இந்தக் காட்சி இருக்கிறதாம். இது ரசிகர்களை வெகுவாக கிளுகிளுப்பூட்டும் என்கிறார்கள் யூனிட்டில்.

இதுவரை இல்லாத அதிரடிப் படமாக வேலாயுதம் உருவாகிறது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

இப்படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் வில்லன்கள். கிட்டத்தட்ட 15 வில்லன்கள் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் பால்காரர் வேடத்தில் நடிக்கிறார் விஜய். சரண்யா மோகன் அவரது தங்கையாக வருகிறார்.

படத்தில் காமெடி பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், ராகவ் ஆகியோர் காமெடிக்குக் கை கோர்த்துள்ளனர். வழக்கமான வடிவேலு படத்தில் இல்லாத குறையை இவர்கள் நிவர்த்தி செய்து விடுவார்கள் என்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்து விட்டனர். கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாம்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...