இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் இலியானா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் நண்பன்.
இப்படத்தின் பாடல்கள் குறித்து பாடலாசிரியர் கார்க்கி தனது டிவிட்டர் இணையத்தில் " விஜய் பிரகாஷுடன் இணைந்து நண்பன் படத்திற்காக ஒரு அழகான பாடலை பதிவு செய்தோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த பாடலில் பல்வேறு மொழிகளின் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளோம். இயக்குனர் ஷங்கர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் எப்போதும் புதிய முயற்சிகளை ஊக்குவிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் எனது நன்றி" என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதுகுறித்து தனது டிவிட்டர் இணையத்தில் " மதன் கார்க்கி மிகவும் அழகாக 10 மொழிகளில் ஒரு பாடல் எழுதியுள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள் " என்று தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கும் பாடல்களில் அர்த்தம் இல்லாத, ஆனால் கேட்க புதிதாக இருக்கிற வார்த்தைகளைப் பயன்படுத்துவார். ஆதவன் படத்தில் " டமக்கு டமக்கு டம டம்மா.." " ஷசிலி பிசிலி ஷசக்கலி.." போன்ற பாடல்கள் வந்தன. வெவ்வேறு மொழி வார்த்தைகளை போட்டு இசையமைத்திருக்கும் பாட்டும் நிச்சயம் ஹிட்டாகும் என்கிறது ரசிகர்கள் வட்டம்.
Thursday, April 21
நண்பனுக்காக பத்து மொழிகளில் ஒரு பாடல்!
8:44:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment