10:42:00 AM
தேர்தல் நாளன்று நடிகர் விஜய், தன் மனைவி மற்றும் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சி.யுடன் சென்னை அடையாரில் உள்ள கார்ப்பரேசன் பள்ளிக்கு வந்து வோட்டு போட்டுள்ளார். |
வாக்களித்த பின் அவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு,கருத்து கேட்டனர். ஒவ்வொரு தேர்தலிலும் நாற்பத்தைந்து சதவீதத்தினர் வாக்களிப்பதில்லை. இது எனக்கு வருத்தமளிக்கும். ஆனால்,இன்று வாக்களிக்க வரும் முன் டிவியில் இதுவரையில் எழுபது சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக செய்தி வரவும்,எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
இது ஒரு மாற்றம், எழுச்சி. இதற்க்கு தேர்தல் கமிஷனை பாராட்டியே ஆக வேண்டும். இந்தத் தேர்தலில் பணியாற்றிய என் மக்கள் இயக்கத்தினர், ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் அவர். |
|
0 Comments:
Post a Comment