'சட்டப்படி குற்றம்' படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்துவிட்டார்
எஸ்.ஏ.சந்திரசேகர்.ஆனால் இப்படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுக்க முயன்றதாக தொடர்ந்து குறை கூறி வருகிறார் அவர். இந்நிலையில் இன்று காலை தன்னை சந்திக்க வரும்படி அழைப்பு விடுத்தாராம் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் ஜெயலலிதா.
இன்று காலை 11.30 மணிக்கு சங்கம் ஹோட்டலில் சந்திக்கிறார்கள் இருவரும். திமுக தேர்தல் மேடையில் வடிவேலு பேசிய பேச்சு நாடு முழுவதும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை முறியடிக்கும் விதமாக விஜய்யை மேடை ஏற்றதான் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக யூகிக்கப்படுகிறது.
ஆனால் தேர்தல் நேரத்தில் வாய்ஸ் மட்டும்தான் என்ற முடிவிலிருக்கும் விஜய், அப்பா எஸ்.ஏ.சி சொல்வதை ஏற்றுக் கொண்டு பிரச்சாரத்திற்கு வருவாரா என்பதையெல்லாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!













0 Comments:
Post a Comment