
Friday, April 22
காவலன்
6:36:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)
அதிகார எதிர்ப்பு மற்றும் ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நடுவில் வெளிவந்திருக்கிறது காவலன். காதை அடைக்கும் பன்ச் சவடால், கர்ண கொடூர வில்லன் சவால் இந்த இரண்டும் இல்லாததற்காகவே காவலன் சிறந்த படம் என்று சொல்கிறவர்களை வெள்ளாவியில்தான் வெளுக்க வேண்டும். தான் அபிமானம் வைத்திருக்கும் ராஜ்கிரணின் மகளுக்கே பாடிகாடாகப் போகிறார் விஜய். அவரது குளோசப் ஃபாலோ அப்பை விரும்பாத ராஜ்கிரணின் மகள் அசின், செல்ஃபோன் மூலமாக விஜய்யை காதலிப்பதாகச் சொல்கிறார். சொல்ஃபோன் பெண் யார் என்பது தெரியாமலே காதலில் கசிந்துருகிறார் விஜய். விஷயம் ராஜ்கிரணுக்கு தெரிய... நம்பினால் நம்புங்கள், கடைசி ஐந்து நிமிடம் மட்டும் பலரும் எதிர்பார்க்காத திருப்பம்.
0 Comments:
Post a Comment