காவலன் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் வேலாயுதம் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற மே 14ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன் விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். டைரக்டர் ராஜா. இப்படத்தின் 90 சதவீத சூட்டிங் முடிவடைந்த நிலையில் இருக்கிறது இன்னும் சில படப்பிடிப்புகளே உள்ளன , விஜய் பிறந்தநாளில் இப்படம் வெளியாக இருக்கிறது, தற்பொழுது விஜய் நண்பன் படப்பிடிப்பிற்காக அந்தமானில் உள்ளார்.இப்படப்பிடிப்பு முடிவடைந்து திரும்பிய பின்னர் வேலாயுதம் பட டீம் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளது.இதில் விஜய் ஜெனிலியா பங்குபெறும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.பட வேலைகள் தாமதாகும் சமயத்தில் வேட்டைக்காரன் காவலன் படங்களுக்கு நிகழந்த மாதிரி அப்பாடல் காட்சி இந்தியாவின் அழகு மிகுந்த இடங்களில் படமாக்கலாம்.எது எபடியோ வேலாயுதம் படம் ரசிகர்கள் மத்தில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது விஜயின் பிறந்த நாளன்று திரையுலகை கலக்க உள்ளது வேலாயுதம் திரைப்படம்!!!













0 Comments:
Post a Comment