விஜய் ஹன்சிகா ஜெனிலியா நடிப்பில் தயாராகி வரும் படம் வேலாயுதம் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இப்படத்தின் போஸ்புரடெக்சன் வேலைகள் மும்முரமாக இடம்பெறுகின்றன.அத்துடன் பாடல் வெளியீட்டு நடவடிக்கையும் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா
மே மாதம் 14 ம் தேதி நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது.நேரு விளையாட்டரங்கினரிடம் வேலாயுதம் தயாரிப்பு தரப்பு அனுமதி கேட்டுள்ளனராம் என நேரு விளையாட்டரங்கில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது.ஆனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இது பற்றி இன்னும் கூறவில்லை எனினும் மே மாதம் 14 ம் திகதி பாடல் வெளியீடு என்பது உறுதியாகிவிட்டது.இவ்விழாவிற்கு வரும் பிரபலங்களின் விபரத்தை மிக மிக இரகசியமாக வைத்துள்ளார் ரவி.சங்கர் அஜித் சீமான் கிந்தி நடிகர்களில் ஒருவர் பங்குபெறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.டோனியையும் விழாவிற்கு அழைக்கும் முயற்சியில் உள்ளார் ரவி
Director & Written by: M.
Starring: Vijay, Genelia D’Souza, Hansika
இப்படத்தின் பாடல்களை விஜய் அன்டனி உருவாக்கியுள்ளார்.ஆரம்பப்பாடல் மிகப்பிரமாண்டமாக தமிழ் நாட்டு திருவிழா நிகழ்ச்சியுடன் இடம்பெற்றுள்ளது.மானாட்டம் மயிலாட்டம் என பல நிகழ்வுகள் இப்பாடலில் இடம்பெற்கிறது.முருக கடவுளை மையமாக கொண்டு பாடல் அமைக்கப்பட்டுள்ளது அடுத்த பாடல் ஒன்று பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.இது படத்தின் குத்துப்பாட்டிற்கு சான்றாக அமைக்கிறது.இதில் விஜயும் ஹன்சிகாவும் இணைந்து கலக்கியுள்ளனர்.வேட்டைக்காரன் பட கரிகாலன் பாடலை விட சிறப்பாக அமையவுள்ளது இப்பாடல் என கூறுகிறது படத்தரப்பு அடுத்த பாடல் விஜய் கன்சிகா பங்கு பெறும் பாடல் .இதற்கு என தனியான அரங்கு அமைத்து படமாக்கியுள்ளனர்.பல்வேறுபட்ட நடனக்கலைஞர்களுடன் சேர்ந்து ஆடியுள்ளனர் விஜய் மற்றும் ஹன்சிகா விஜய் ஜெனிலியா பங்குபெறும் பாடலை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க உள்ளனர்.இதன் படப்பிடிப்பு மே மாதம் முதலாவது வாரத்தில் இடம்பெற உள்ளது.
விஜய் ஹன்சிகா சரண்யா பங்குபெறும் பாடல் ஒன்றும் உள்ளது.படத்தின் டைட்டில் பாடலை வித்தியாசமாக இடம்பெறுகிறது.வேலா வேலா வேலாயுதம் என்ற இந்தபாடல் படம் முழுவதும் தீம் மியூசிக்கா வர உள்ளது.குறிப்பாக மாஸ் அணிந்து விஜய் வரும் போது தியேட்டரே இப்பாடலை கேட்டு ரசிக்கும் எனவும் கூறப்படுகிறது














0 Comments:
Post a Comment