ரஜினி நடித்த மறக்க முடியாத வேடங்களில் அண்ணாமலை பால்கார வேடம் முக்கியமானது. பால் விற்றே கோடீஸ்வரரானவர் அண்ணாமலை.
ரஜினியின் முன்னாள் சிஷ்யரான விஜய் தனது வேலாயுதம் படத்தில் பால்காரராக நடிப்பதாக செய்தி கசிந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ராபின்ஹுட் போன்ற இல்லாதவர்களுக்கு நல்லதை செய்யும் வேடமாம்.
வேலாயுதம் படம் பல வருடங்கள் முன் நாகார்ஜுனா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த படம் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். அதேநேரம், இது எனது சொந்தக் கதை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஜெயம் ராஜா.
படத்தின் இரு ஹீரோயின்களில் ஒருவரான ஜெனிலியா தொலைக்காட்சி நிருபராக வருகிறார். ஹன்சிகா மோத்வானிக்கு கிராமத்து சுட்டிப் பெண் வேடம்.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
Tuesday, April 26
விஜய் - புதிய அண்ணாமலை
5:43:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment