ஜெயம் ராஜா விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தை இயக்கி வருகிறார். தனது தம்பி ஜெயம் ரவியை தவிர்த்து அவர் வேறு ஹீரோவை இயக்குவது இதுதான் முதல்முறை. இனி தொடர்ந்து வெளி ஹீரோவை இயக்குவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அஜீத்திடம் ஒரு கதை கூறியிருக்கிறார் ராஜா. கதை பிடித்திருப்பதாகவும், பில்லா இரண்டாம் பாகத்துக்கு முன் ராஜா இயக்கத்தில் அஜீத் நடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அஜீத்தும், விஜய்யும் இப்போது அத்தியந்த நண்பர்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் நீங்க கண்டிப்பா நடிக்கணும் என்று அஜீத் விஜய்யையும், ஜெயம் ராஜா இயக்கத்தில் நீங்க நடிக்கணும் என்று விஜய் அஜீத்தையும் கேட்டிருக்கிறார்கள். இதில் விஜய்யின் கோரிக்கை நிறைவேறும் சகுனங்கள் தென்படுகின்றன.
Thursday, April 21
அஜீத்துக்கு கதை சொன்ன விஜய் இயக்குனர்
1:54:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment