இந்நிலையில் சிம்புவின் வேட்டை மன்னன் படப்பிடிப்புக்கு வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் விஜய். சிம்புவின் வேட்டை மன்னன் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடந்து வந்தது. இந்தப் படத்தில் சிம்புவுடன் ஜெய்யும் நடிக்கிறார். புதன்கிழமை ஜெய்யின் பிறந்த நாள். இதனை படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது வேலாயுதம் படப்பிடிப்பும் அங்கு நடந்ததாகத் தெரிகிறது. உடனே படப்பிடிப்பில் இருந்த விஜய்யையும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்திருக்கிறார்கள். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட விஜய், வேட்டை மன்னன் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்து ஜெய்க்கு கேக் ஊட்டி தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது சிம்புவும், அவரும் மனம்விட்டுப் பேசிக் கொண்டதாக ஆச்சரியப்படுகிறார்கள் இரு யூனிட்டிலும் உள்ளவர்கள்.
அஜீத் மீதுள்ள அதீத அன்பால் விஜய்யை பலமுறை மறுதலித்திருக்கிறார் சிம்பு. விஜய் நடிப்பதால்தான் நண்பன் படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்றுகூட செய்தி வெளியானது.
Monday, April 11
சிம்பு படப்பிடிப்பில் விஜய்
2:02:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment