இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Sunday, April 24

வேலாயுதம் படத்தின் விளம்பரம் மே மாதம் ஆரம்பம்!!!

விஜயின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் வேலாயுதம் .விஜய் ஜெனிலியா ஹன்சிகா கூட்டணியில் இப்படம் ஜூன் மாதம் 22 ம் திகதி விஜயின் பிறந்த நாளன்று வெளிவர உள்ளது.இப்படத்தின் தயாரிப்பாளர் பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம் ரவிச்சந்திரன் ஆவார்.இப்படத்தின் தொடக்கவிழாவையே விஜய் ரசிகர் முண்ணிலையில் சிறப்பாக கொண்டாடினார்.படத்தின் தொடக்கவிழா அன்று ஒரு ரெயிலர் வெளியிடப்பட்டது.இப்படத்தின் ரெயிலர் பிரமிப்பை ஏற்படுத்தியது.இப்படத்தின் ஆடியோ வெளியீடன்று இன்னும் ஒரு ரெயிலர் வெளியிட உள்ளார் ரவி.அதற்குரிய ஏற்பாடுகள் இப்போது நடைபெறுகின்றன.இப்படத்தின் போஸ்ட்புரடெக்சன் வேலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறப்பாக நகர்கிறது வேலாயுத வேலைகள்.இப்படத்தின் விளம்பரத்தை மே மாதம் தொடங்கவுள்ளார் ரவி.இப்படத்தின் ஆடியோ மே மாதம் 14 ம் திகதி வெளியிடப்படும் எனக்கூறப்படுகிறது எனினும் இது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்பவர்களிடம் சென்று பேசி வருகின்றனர்.எனினும் சிலர் ஓகே சொல்லிவிட்டனர் எனினும் அச்செய்தியையும் இரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.ரஜனி கமலிடம் கேட்கப்பட்டு வருகிறது.இப்படத்தின் ஆடியோவை சொனி மியூசிக் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இப்படத்தின் சட்டலைட் உரிமயை சன் ரீவி மற்றும் விஜய் ரீவீ வாங்க போட்டி போடுகின்றன.இப்படத்தை தமிழகம் முழுவதும் ஆஸ்கார் பிலிமே வெளியிடுகிறது.வேலாயுதம் பட விளம்பர ஸ்டில்களை உங்கள் அபிமான நாளிதழ்களில் மே மாதம் காணத்தயாராகுங்கள்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...