தேர்தல் நெருங்கும் போது அதிமுக பக்கம் சாய்ந்தவர்களில் முக்கியமானவர் விஜய். விஜய் மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும் விஜய் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகரன் ஜெயலலிதாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். விஜய் சொல்லித்தான் இந்த ஆதரவை அளிப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் அவர் பிரச்சாரம் எதையும் மேற்கொள்ளவில்லை. எஸ் ஏ சந்திரசேகரன் மட்டுமே கடைசி சில தினங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். கருணாநிதியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், தேர்தல் நாளான இன்று மாலை சென்னை அடையாறில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாக்களித்தனர். பின்னர் விஜய் பேசுகையில், “இந்தத் தேர்தலில் மக்கள் மிகவும் எழுச்சியுடன் வாக்களிப்பதைக் காண முடிந்தது. தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்,” என்றார்.
இந்தத் தேர்தலில் மக்கள் எழுச்சியோடு உள்ளனர். நிச்சயம் தமிழகத்தில் மாற்றம் வரும், என்று நடிகர் விஜய் கூறினார்.
Thursday, April 14
தமிழகத்தில் புது எழுச்சி… மாற்றம் வரும்! – விஜய் பேட்டி
1:59:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment