இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, April 19

பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வேலை ஆரம்பம்




விஜயின் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் வேலாயுதம்.இப்படத்தை தயாரிப்பவர் பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம் ரவிச்சந்திரன்.தசாவதாரம் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தியதை போல் இப்பட ஆடியோ வெளியீட்டையும் நடத்த உள்ளார்.இப்படத்தின் தொடக்க விழாவையே மிகப்பிரமாண்டமாக நடத்தியவர் இசை வெளியீட்டை அதை விட பிரமாண்டமாக நடத்த உள்ளார்.அது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன.முக்கிய தமிழ் முண்ணனி பிரபலங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் எண்ணம் காணப்படுகிறது ரவிச்சந்திரனிடம்.மற்றும் ஹிந்திப்பிரபலங்களில் யாரையாவது ஒருவரை அழைக்கும் எண்ணமும் உள்ளது.அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ரவி.இவ்விழாவிற்கான ஒழுங்கமைப்பு முயற்சிகள் மிக வேகத்தில் இடம்பெறுகிறது.அத்துடன் படத்தின் இறுதிக்கட்ட வேலையும் சிறப்பாக நடைபெறுகிறது.விஜய் அன்டனியின் இசையில் காதுகளை குளிர்விக்க உள்ளான் வேலாயுதம் .படத்துவக்க விழாவிலே தீம் மியூசிக்கை போட்டு அசத்திய விஜய் அன்டனி பாடல் வெளியீட்டு விழா அன்று அதனை நிரூபிக்க உள்ளார்.தகரம் கிடைத்தாலே தங்கமாக்கும் ரவி தங்கமே கிடைத்தால் விடுவாரா?.சொனிமியூசிக் பெரிய விலைக்கு கடும் போட்டியின் மத்தியில் பாடல் உரிமையை வாங்கியுள்ளது.படத்தின் சட்டலைட் உரிமை யாருக்கு எனத்தெரியவில்லை.அது தொடர்பான செய்திகளை விரைவில் அறியத்தருவோம்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...