விஜய்யின் பகவதி படத்தில் அவரது தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதன்பின்னர் சென்னை-28ல் நடித்த ஜெய் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து கோவா, கனிமொழி, அவள் பெயர் தமிழரசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. நேற்று ஜெய்க்கு பிறந்தநாள் என்பதை முன்கூட்டிய அறித்த சிம்பு முன்னதாகவே கேக் ஆடர் பண்ணியிருந்தார். ஆனால் இந்த விஷயங்கள் யாவும் ஜெய்க்கு தெரியாமல் ரகசியமாக வைத்து இருந்தார். பின்னர் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிலேயே பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்தார் சிம்பு. அருகே விஜய் நடித்து கொண்டிருக்கும் வேலாயுதம் படத்தின் சூட்டிங் நடைபெற்றது. ஜெய்யின் பிறந்தநாளை அறிந்ததும் விஜய்யும் கலந்து கொண்டு ஜெய்க்கும், சிம்புவுக்கும் இன்ப அதிர்சசி அளித்தார். பின்னர் விஜய், சிம்பு மற்றும் வேட்டை மன்னன் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த பிறந்தநாளை என் வாழ்வில் மறக்க முடியாது என்றும், விஜய் மற்றும் சிம்பு ஆகியோர் நேரில் கலந்து கொண்டு என்னை வாழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறுகிறார் ஜெய்
சுப்ரமணியபுரம் ஜெய் இந்தாண்டு தனது பிறந்தநாளை நடிகர் விஜய் மற்றும் சிம்புவுடன் கொண்டாடினார். பிறந்தநாளில் விஜய், சிம்பு பங்கேற்று ஜெய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
Monday, April 11
ஜெய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், சிம்பு
2:10:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment