டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் நண்பன் படத்தின் சூட்டிங் இரண்டு கட்டங்கள் முடிந்து, மூன்றாவது கட்ட சூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்தியில் வெளிவந்து மாபெரும் ஹிட்டான 3-இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்க, ஜெமினி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் சூட்டிங் கடந்தமாதம் ஊட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட சூட்டிங் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட சூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் விஜய், இலியானா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தனது முந்தைய படங்களை போன்று இழுத்தடிக்காமல் சீக்கிரமாக இப்படத்தை இயக்கி முடிக்கும் முனைப்போடு எடுத்து வருகிறார் ஷங்கர்.
Monday, April 25
சென்னையில் நண்பன் சூட்டிங்
11:14:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment