இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, April 20

வேலாயுதம் பாடல் வெளியீடு ஜெயலலிதா வருவாரா?





திரி சாய்ந்திருந்தாலும், சுடர் நிமிர்ந்தேதான் நிற்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். வேலாயுதம் படப்பிடிப்பில் விஜய் கொடுக்கும் சின்ன சின்ன குடைச்சல்கள் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஊர் உலகம் மயங்கும்படி நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் அவர்.

தனது சட்டப்படி குற்றம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.வை அழைத்து வந்துவிட வேண்டும் என்று துடியாக துடித்தார் எஸ்.ஏ.சி. ஆனால் அது நடைபெறவில்லை. என் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் உண்டு. நான் இல்லாமலே விழாவை ஜாம் ஜாம்னு நடத்துங்க என்று கூறிவிட்டார் ஜெ.

ஆனால் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ஜெ. இந்த விழாவை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் ரவிச்சந்திரன். எது நடந்தாலும் அது தேர்தல் முடிவை ஒட்டியே அமையும் என்பதுதான் நிதர்சனம்!

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...