இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Monday, April 25

விஜய் ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்க்குச் சொந்தமான வீடு மீது சிலர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, விஜய் ரசிகர்கள் இன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இப்போது இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி குடியிருந்து வரும், நடிகர் விஜய்க்கு சொந்தமான வீட்டின் மீது சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். யாரோ சிலர் குடிபோதையில் செய்த செயல் இது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்டமாக, இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டிக்கக் கோரியும், கோவை மாவட்ட விஜய் இளைஞர் நற்பணி இயக்கம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

செஞ்சிலுவை சங்கம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விஜய் வீடு மீது கல்வீசி தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...