இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, April 22

விஜயின் பதில் என்ன?


காவலன் திரைப்படம் பல் எதிர்ப்புகளின் மத்தியில் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகியது.இப்படத்துடன் வெளிவந்த ஏனைய படங்களுக்கு கிடைத்த தியேட்டர்கள் மாதிரி இப்படத்திற்கு அதிக தியேட்டர் கிடைக்கவில்லை.எனினும் இப்படத்தின் கதை இப்படத்தை மேலும் வெற்றியடைய வைத்தது.நல்ல விமர்சனங்களும் படத்திற்கு பெரிய பலமாய் அமைந்தது.இப்படம் இம்மாதம் 24 ம் திகதி நூறாவது நாளை தொட உள்ளது.விஜய் ரசிகர்கள் அதனை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.இறுதியாக விஜயின் போக்கிரி படத்திற்கு 175 வது நாள் கொண்டாட்டமும் குருவி படத்திற்கு 150 வது நாள் கொண்டாட்டமும் விழாவாக செய்யப்பட்டது.ஆனால் தற்பொழுது நிலைமை வேறு ஒரு படம் நூறு நாளை தொடுவதென்பது அபூர்வம்.அப்படி நூறு நாள் ஓடினாலும் ஒரு தியேட்டரில் ஒரு காட்சியாக மட்டுமே அப்படம் ஓடும்.ஆனால் காவலன் இப்பொழுதும் ஐந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இவ்வாறு சிறப்பான வெற்றி பெற்ற திரைப்படத்திற்கு கண்டிப்பாக வெற்றி விழா கொண்டாட வேண்டும் என விஜய் ரசிகர் மன்றங்கள் விஜய்க்கு கூறி வருகின்றன.ஆனால் விஜய் எந்த விதமான பதிலும் கூறவில்லை.ஆனால் ரசிகர்களும் விநியோகஸ்தர்களும் வெற்றி விழா கண்டிப்பாக கொண்டாட வேண்டும் எனக்கூறுகின்றனர்.விஜயின் அப்பாவும் அதையே விரும்புகிறார்.எனவே விஜயிடம் முடிவை கேட்டு விழா எடுக்க முடிவுசெய்கிறது காவலன் தரப்பு.விஜயின் பதிலுக்கா காத்திருக்கின்றனர்.இக்காலதில் படத்தின் பூஜையையும் பாடல் வெளியீட்டையும் பிரமாண்டமாக கொண்டாடுபவர்கள் படத்தின் வெற்றிவிழாவையும் பிரமாண்டமாக கொண்டாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...