தனது வேலாயுதம் பட வெளியீட்டையும் பிறந்த நாள் விழாவையும் ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாட முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.
எம் ராஜா இயக்கத்தில் விஜய் தற்போது வேலாயுதம், படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஜூன் 22-ம் தேதி, விஜய் பிறந்த நாளில் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்துள்ளனர்.
வேலாயுதம் படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் பிறந்த நாளில் படம் வெளியாவதால், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் இதனை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
ஆனால் வீண் செலவுகள் செய்யாமல், மக்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த விழா அமைய வேண்டும் என விஜய் கூறிவிட்டதால், அன்று ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் இலவச உணவு வழங்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யே இந்த உதவிகளை நேரில் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
இவை தவிர, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் அந்த நாளில் அறிவிக்க உள்ளார்களாம்.
நண்பன் படத்தை பற்றி தினம் ஒரு தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் சூட்டிங்கை முடிந்த நண்பன் குழு, இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அந்தமான் தீவில் படமாக்கி வருகிறது.
இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்க, பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். பொதுவாக ஷங்கர் தன்னுடைய படங்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுப்பார். ஆனால் நண்பன் படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி கொண்டு இருக்கிறார். படத்தின் பாதி காட்சிகளை படமாக்கிவிட்ட ஷங்கர், இப்போது க்ளைமாக்ஸ் காட்சிக்காக அந்தமானில் முகாமிட்டுள்ளார். தற்போது அந்தமானில் உள்ள ரம்மியமான பகுதியில் நண்பன் சூட்டிங் நடந்து வருகிறது. தீபாவளிக்கு நண்பன் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவலன் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் வேலாயுதம் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற மே 14ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன் விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். டைரக்டர் ராஜா. இப்படத்தின் 90 சதவீத சூட்டிங் முடிவடைந்த நிலையில் இருக்கிறது இன்னும் சில படப்பிடிப்புகளே உள்ளன , விஜய் பிறந்தநாளில் இப்படம் வெளியாக இருக்கிறது, தற்பொழுது விஜய் நண்பன் படப்பிடிப்பிற்காக அந்தமானில் உள்ளார்.இப்படப்பிடிப்பு முடிவடைந்து திரும்பிய பின்னர் வேலாயுதம் பட டீம் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளது.இதில் விஜய் ஜெனிலியா பங்குபெறும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.பட வேலைகள் தாமதாகும் சமயத்தில் வேட்டைக்காரன் காவலன் படங்களுக்கு நிகழந்த மாதிரி அப்பாடல் காட்சி இந்தியாவின் அழகு மிகுந்த இடங்களில் படமாக்கலாம்.எது எபடியோ வேலாயுதம் படம் ரசிகர்கள் மத்தில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது விஜயின் பிறந்த நாளன்று திரையுலகை கலக்க உள்ளது வேலாயுதம் திரைப்படம்!!!
ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் நண்பன்.இதில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடிக்கிறார்.விஜய் ஜீவா சிறீகாந் இலியானா இப்பொழுது அந்தமானில் நண்பன் படப்பிடிப்பில் உள்ளனர்.இப்படத்தின் முக்கியமான காட்சிகளை இன்று அந்தமானில் படமாக்கினார் ஷங்கர்.இதில் விஜய் இலியானா ஸ்ரீகாந்த் ஜீவா ஆகியோர் பங்குபற்றினர்.படத்தின் இறுதிக்காட்சி படமாக்கப்பட்டது.கண் கவர் இயற்கை அழகு கொண்ட அந்தமானின் கரையோர பிரதேசங்களில் இப்படப்பிடிப்பு இடம்பெற்றது.இதனை மனோஜ் பரம கம்ஸா அழகாக படமாக்கினார்.நாளைய தினமும் படப்பிடிப்பு அந்தமானில் இடம்பெற உள்ளது.விஜய் இலியானா பங்கு பெறும் ஒரு பாடலின் சில காட்சிகளும் படமாக்க உள்ளது.நண்பன் குழு அந்தமானில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு லண்டனுக்கு விஜய் இலியானா பங்குபெறும் பாடலை படமாக்க செல்லவுள்ளனர் எனக்கூறப்படுகிறது.இப்பாடலுக்குரிய இடங்க்ளை ஏற்கனவே சங்கர் தெரிவு செய்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இப்பாடலுக்காக் லண்டன் செல்வது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.நாளைய படப்பிடிப்பின் பின்னே தெரியவரும்...
விஜய் ஹன்சிகா ஜெனிலியா நடிப்பில் தயாராகி வரும் படம் வேலாயுதம் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இப்படத்தின் போஸ்புரடெக்சன் வேலைகள் மும்முரமாக இடம்பெறுகின்றன.அத்துடன் பாடல் வெளியீட்டு நடவடிக்கையும் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா
மே மாதம் 14 ம் தேதி நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது.நேரு விளையாட்டரங்கினரிடம் வேலாயுதம் தயாரிப்பு தரப்பு அனுமதி கேட்டுள்ளனராம் என நேரு விளையாட்டரங்கில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது.ஆனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இது பற்றி இன்னும் கூறவில்லை எனினும் மே மாதம் 14 ம் திகதி பாடல் வெளியீடு என்பது உறுதியாகிவிட்டது.இவ்விழாவிற்கு வரும் பிரபலங்களின் விபரத்தை மிக மிக இரகசியமாக வைத்துள்ளார் ரவி.சங்கர் அஜித் சீமான் கிந்தி நடிகர்களில் ஒருவர் பங்குபெறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.டோனியையும் விழாவிற்கு அழைக்கும் முயற்சியில் உள்ளார் ரவி
இப்படத்தின் பாடல்களை விஜய் அன்டனி உருவாக்கியுள்ளார்.ஆரம்பப்பாடல் மிகப்பிரமாண்டமாக தமிழ் நாட்டு திருவிழா நிகழ்ச்சியுடன் இடம்பெற்றுள்ளது.மானாட்டம் மயிலாட்டம் என பல நிகழ்வுகள் இப்பாடலில் இடம்பெற்கிறது.முருக கடவுளை மையமாக கொண்டு பாடல் அமைக்கப்பட்டுள்ளது அடுத்த பாடல் ஒன்று பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.இது படத்தின் குத்துப்பாட்டிற்கு சான்றாக அமைக்கிறது.இதில் விஜயும் ஹன்சிகாவும் இணைந்து கலக்கியுள்ளனர்.வேட்டைக்காரன் பட கரிகாலன் பாடலை விட சிறப்பாக அமையவுள்ளது இப்பாடல் என கூறுகிறது படத்தரப்பு அடுத்த பாடல் விஜய் கன்சிகா பங்கு பெறும் பாடல் .இதற்கு என தனியான அரங்கு அமைத்து படமாக்கியுள்ளனர்.பல்வேறுபட்ட நடனக்கலைஞர்களுடன் சேர்ந்து ஆடியுள்ளனர் விஜய் மற்றும் ஹன்சிகா விஜய் ஜெனிலியா பங்குபெறும் பாடலை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க உள்ளனர்.இதன் படப்பிடிப்பு மே மாதம் முதலாவது வாரத்தில் இடம்பெற உள்ளது.
விஜய் ஹன்சிகா சரண்யா பங்குபெறும் பாடல் ஒன்றும் உள்ளது.படத்தின் டைட்டில் பாடலை வித்தியாசமாக இடம்பெறுகிறது.வேலா வேலா வேலாயுதம் என்ற இந்தபாடல் படம் முழுவதும் தீம் மியூசிக்கா வர உள்ளது.குறிப்பாக மாஸ் அணிந்து விஜய் வரும் போது தியேட்டரே இப்பாடலை கேட்டு ரசிக்கும் எனவும் கூறப்படுகிறது
Director & Written by:M.
Raja
Producer:Venu Ravichandran
Starring:Vijay, Genelia D’Souza, Hansika
Motwani
Saranya Mohan Santhanam
Music Director:Vijay Antony
Cinematography:Priyan
Editor:Mohan
Studio:Aascar Films
Distributor:V. Ravichandran
Audio Release Date: May 14, 2011
Movie Release Date:June 22, 2011 ( Vijay’s Birthday)
தெலுங்கு, இந்தி மொழிகளில் எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும், எவ்வளவோ தயாரிப்பாளர்கள் மன்றாடிக் கேட்டும் கூட, 1992- முதல் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து வருபவர் இளையதளபதி விஜய். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான் இதிலும் அவருக்கு குரு!
ஒரிஜினல் தமிழ் நாயகனான நமது இளையதளபதி இதுவரை பெற்றுள்ள விருதுகள்:
1998- தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது (காதலுக்கு மரியாதை)
1998 – தமிழக அரசின் கலைமாமணி விருது
2000- தமிழக அரசின் எம்ஜிஆர் விருது
2004- சென்னை கார்ப்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது (கில்லி)
2004-தினகரன் சிறந்த நடிகர் விருது (கில்லி)
2004-பிலிம்டுடே சிறந்த நடிகர் விருது (கில்லி)
2005-பொது சேவைக்கான வெள்ளிப் பதக்கம்
2005- திருப்பாச்சி படத்துக்காக தமிழக அரசு சிறப்பு விருது
2006- டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ‘நாளைய சூப்பர் ஸ்டார்’ விருது
2007-விஜய் டிவி விருது – எண்டர்டெயினர் ஆப் தி இயர் – போக்கிரி / அழகிய தமிழ்மகன்
2007-அம்ரிதா மாத்ருபூமி சிறந்த நடிகர் விருது (போக்கிரி)
2007- எம்ஜிஆர் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
2008-இசையருவி சிறந்த நடிகர் விருது (போக்கிரி)
2009- விஜய்டிவி மக்கள் விரும்பும் நடிகர் விருது – வேட்டைக்காரன்
வேலாயுதம் படத்தில் எத்தனையை ஹைலைட்டான விஷயங்கள் இருக்க அதில் ஹன்சிகா மோத்வானி, விஜய்க்கு கொடுத்துள்ள ஒரு சின்ன முத்தக் காட்சி கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு இரண்டு நாயகிகள், ரூ. 2 கோடி செலவில் ஒரு பாடல் காட்சி, பிரமாண்டமான சண்டைக் காட்சி, ஓட்டப் பந்தயக் காட்சி என ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் உள்ளன வேலாயுதத்தில்.
அதேசமயம், அதை விட சூப்பர் ஹிட்டாக பேசப்படுவது ஹன்சிகா கொடுத்துள்ள முத்தம்தான். இப்படத்தில் விஜய்க்கு படு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம் ஹன்சிகா. அதாவது விஜய்யின் உதடுகளுக்கு வெகு நெருக்கமாக வந்து முத்தமிடுவது போல இந்தக் காட்சி இருக்கிறதாம். இது ரசிகர்களை வெகுவாக கிளுகிளுப்பூட்டும் என்கிறார்கள் யூனிட்டில்.
இதுவரை இல்லாத அதிரடிப் படமாக வேலாயுதம் உருவாகிறது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
இப்படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் வில்லன்கள். கிட்டத்தட்ட 15 வில்லன்கள் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் பால்காரர் வேடத்தில் நடிக்கிறார் விஜய். சரண்யா மோகன் அவரது தங்கையாக வருகிறார்.
படத்தில் காமெடி பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், ராகவ் ஆகியோர் காமெடிக்குக் கை கோர்த்துள்ளனர். வழக்கமான வடிவேலு படத்தில் இல்லாத குறையை இவர்கள் நிவர்த்தி செய்து விடுவார்கள் என்கிறார்கள்.
படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்து விட்டனர். கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாம்.
விஜய் தற்போது ஜெயம் ராஜாவின் வேலாயுதம் மற்றும் நண்பனில் நடித்து வருகிறார்.இரு படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார் விஜய்.இவரது வேலாயுதம் படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது .மே மாதம் நடுப்பகுதியில் இப்படத்தின் பாடல் வெளியீடு இடம்பெற உள்ளது.தற்போது நண்பன் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.நண்பன் படம் சென்னையை அண்டிய இடங்களில் இடம்பெறுகிறது.இப்படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிய உள்ளது.மே மாதம் தொடக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடிக்க சென்று விடுவார் விஜய் .ஜூன் 22 படம் வெளிவர உள்ளது.இதனை கவனித்த சீமான் தனது படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார்.தேர்தல் முடிந்து என்ன முடிவு என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சீமான் விஜயின் அடுத்த படம் குறித்து விஜயிடம் மீண்டும் கதைத்துள்ளார்.வேலாயுதம் முடிந்தவுடன் படத்தை தொடங்கலாம் எனக்கூறியுள்ளார் விஜய்.ஏற்கனவே விஜய் சீமானின் பகலவன் படத்தில் நடிக்கப்போவதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.பின் சீமானும் அதனை உறுதிப்படுத்தினார் எனினும் எப்பொழுது தொடங்கும் என்பதை மட்டும் கூறவில்லை.ஆனால் இது மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.கலைபுலி தாணு தயாரிக்கிறார்.ஏற்கனவே விஜயுடன் இணைந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.கந்தசாமி எனும் பிரமாண்டபடத்தை எடுத்தவர் பகலவனிலும் அப்பிரமாண்டத்தை காட்ட உள்ளார்.விஜய் நண்பன் படத்தில் நடிக்க சென்றதால் பகலவன் படம் தள்ளி போனது.இனியும் எந்த மாற்றமும் நடைபெறக்கூடாது என்ற முடிவில் உள்ளார் விஜய் சீமான் மற்றும் தாணு. படத்தின் கதாநாயகியை மட்டும் சஸ்பென்சாக வைத்துள்ளனர்.எனினும் ஹன்சிகா என கோடம்பக்ககுருவி கிசுகிசுக்கிறது
காவலன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
* மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை. சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை.
*. படம் ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளது. இந்த காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அழககாக, புதுவிதமாக சொல்லும் படமாக இயக்கி இருக்கிறார் ராஜா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் படத்திற்கு பிறகு இப்படியொரு அண்ணன், தங்கை பாசத்தை எந்தபடத்திலும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.
* கிராமமும், நகரமுமாக மாறி, மாறி பயணக்கிறது வேலாயுதம் படத்தின் கதை. கிராமத்துக் கிளர்ச்சியையும், நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்க காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன.
* படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். அவன் விற்பது பால். ஆனால் அன்பால், நட்பால், பிறரையெல்லாம் தன்பால் ஈர்க்கிறான். அவர் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது அதுபோலத்தான் இந்த வேலு(விஜய்) அந்த ஊருக்கு. காதலனாக, பாசமுள்ள அண்ணனாக, ஆவேச இளைஞனாக விஜய்க்கு ஜீசல்பந்தி நடத்து வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.
* படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா, மற்றொருவர் ஹன்சிகா மோத்வானி. இவர்களுடன் சந்தானம் காமெடியில் தன் பங்கிற்கு அசத்த இருக்கிறார்.
* படத்தில் பாலிவுட்டை சேர்ந்த இரண்டு பிரபல வில்லன்கள் உட்பட 15 வில்லன்கள் நடித்திருக்கின்றனர்.
* படத்தில் ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு திருமண காட்சியை அமைத்துள்ளனர். இந்த திருமணத்திற்காக ஊரே பந்தல்போட்டு, கோலம் போட்டு, சீரியல் லைட்கடடி, தோரணம் அமைத்து ஊர்திருவிழா போல் அலங்காரம் செய்து ஆராவரம் செய்திருப்பது பிரமாண்டமான முயற்சி. ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஒரு ஊரே முன்னின்று நடத்தி வைத்துள்ள அந்த திருமணக்காட்சி, இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு படத்திலும் அமைந்ததில்லை.
* வேலாயுதம் படத்திற்காக அந்த ஊரில் ஒரு கிணறு வெட்டி, அதை அன்பளிப்பாக அந்த ஊருக்கே அளித்திருக்கின்றனர்.
நடிகர்திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த பாசமலர் படத்தினை புதுபிரிண்ட் போட் அந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸில் போட்டு காட்டி மக்கள் பார்ப்பது போன்ற காட்சி படமான போது அனைவரும் படத்தில் மூழ்கிக் கிடக்க டைரக்டர் கட் சொல்ல மறந்து விட்டாராம்.
* படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை சுமார் ரூ.2 கோடி செலவில் திருமூர்த்திமலையில் படமாகியுள்ளனர். ஏற்கனவே “சிவகாசி”, “போக்கிரி” படங்களில் விஜய்க்கு ஓபனிங் சாங்கிற்கு நடனம் அமைத்த அசோக்ராஜ், இப்பாட்டுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். கிராமத்து தப்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற ஏராளமான ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் 200கிராமத்து நடன கலைஞர்கள் நயம்காட்ட 150 வெளிநாட்டு நடனக்காரர்கள் ஆடி வெளிநாட்டுக்கலை நயம் காட்டியுள்ளனர். படத்தில் விஜய் எப்படி ஒரு பிரம்மாண்டமோ அதுபோல இந்தபாடலும் பலமடங்கு பிரம்மாண்டமாக இருக்குமாம்.
* இப்படத்தின் சூட்டிங்கில் விஜய் நடிக்க தொடங்கியது முதல் முடியும் வரை ஒருநாள்கூட லேட்டாக வந்ததில்லையாம். அவரால் ஐந்து நிமிடம் கூட சூட்டிங் தாமதமானதில்லையாம். படத்தில் ஒவ்வொரு காட்சியையும், உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்து கொடுத்திருப்பதாக கூறும் இயக்குநர், விஜய்க்கு இந்தபடம் உச்சகட்ட காமெடி படமாகவும் அமையும் என்று கூறுகிறார்.
* படத்தின் தூணாக ஒளிப்பதிவாளர் ப்ரியன் அமைந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம். இவர் ஏற்கனவே சாமி, திமிரு, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
* வேட்டைக்காரன் படத்தை மிஞ்சும் வகையில் இப்படத்தின் இசை வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தில் விஜய்யை பாடவைக்கலாம் என்று முயற்சித்து இருக்கிறார். ஆனால் கடைசியில் விஜய் ஆண்டனியை பாடும்படி செய்துவிட்டார் விஜய்.
* படத்தில் மொத்தம் 5பாடல்கள், 6சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர்.
ரஜினி நடித்த மறக்க முடியாத வேடங்களில் அண்ணாமலை பால்கார வேடம் முக்கியமானது. பால் விற்றே கோடீஸ்வரரானவர் அண்ணாமலை.
ரஜினியின் முன்னாள் சிஷ்யரான விஜய் தனது வேலாயுதம் படத்தில் பால்காரராக நடிப்பதாக செய்தி கசிந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ராபின்ஹுட் போன்ற இல்லாதவர்களுக்கு நல்லதை செய்யும் வேடமாம்.
வேலாயுதம் படம் பல வருடங்கள் முன் நாகார்ஜுனா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த படம் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். அதேநேரம், இது எனது சொந்தக் கதை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஜெயம் ராஜா.
படத்தின் இரு ஹீரோயின்களில் ஒருவரான ஜெனிலியா தொலைக்காட்சி நிருபராக வருகிறார். ஹன்சிகா மோத்வானிக்கு கிராமத்து சுட்டிப் பெண் வேடம்.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் படம் நண்பன்.ஒரு படத்தை எடுப்பதென்றால் பல வருடங்கள் செலவழித்து படத்தை எடுப்பவர் சங்கர் .ஆனால் இப்படத்தில் நிலைமை தலைகீழ்.விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் நண்பன் படம் மிக வேகமாக வளர்கிறது.மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் இடம்பெறுகிறது.தற்பொழுது நண்பன் படக்குழுவினர் அந்தமான் செல்லவுள்ளனர்.அந்தமானில் 6 அல்லது 7 நாட்கள் படப்பிடிப்பு இடம்பெற உள்ளது.படத்தின் முக்கியமான காட்சிகள் அந்தமான் தீவின் கண் கவர் பிரதேசங்களில் படமாக்கப்பட உள்ளது.இப்படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் ஜெனிலியாவுடன் சேர்ந்து டூயட் பாட உள்ளார் வேலாயுதம் படத்திற்காக.காவலன் அடைந்த வெற்றியும் நூறாவது நாளை தாண்டி ஓடும் சந்தோசத்திலும் விஜய் மாறி மாறி படப்பிடிப்பில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இவ்வருடம் மூன்று முறை வித்தியாசமான களத்தில் கலக்க உள்ளார்
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் நண்பன் படத்தின் சூட்டிங் இரண்டு கட்டங்கள் முடிந்து, மூன்றாவது கட்ட சூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்தியில் வெளிவந்து மாபெரும் ஹிட்டான 3-இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்க, ஜெமினி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் சூட்டிங் கடந்தமாதம் ஊட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட சூட்டிங் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட சூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் விஜய், இலியானா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தனது முந்தைய படங்களை போன்று இழுத்தடிக்காமல் சீக்கிரமாக இப்படத்தை இயக்கி முடிக்கும் முனைப்போடு எடுத்து வருகிறார் ஷங்கர்.
விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்க்குச் சொந்தமான வீடு மீது சிலர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, விஜய் ரசிகர்கள் இன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இப்போது இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி குடியிருந்து வரும், நடிகர் விஜய்க்கு சொந்தமான வீட்டின் மீது சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். யாரோ சிலர் குடிபோதையில் செய்த செயல் இது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முதல் கட்டமாக, இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டிக்கக் கோரியும், கோவை மாவட்ட விஜய் இளைஞர் நற்பணி இயக்கம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செஞ்சிலுவை சங்கம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விஜய் வீடு மீது கல்வீசி தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் இலியானா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் நண்பன்.
இப்படத்தின் பாடல்கள் குறித்து பாடலாசிரியர் கார்க்கி தனது டிவிட்டர் இணையத்தில் ” விஜய் பிரகாஷுடன் இணைந்து நண்பன் படத்திற்காக ஒரு அழகான பாடலை பதிவு செய்தோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த பாடலில் பல்வேறு மொழிகளின் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளோம். இயக்குனர் ஷங்கர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் எப்போதும் புதிய முயற்சிகளை ஊக்குவிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதுகுறித்து தனது டிவிட்டர் இணையத்தில் ” மதன் கார்க்கி மிகவும் அழகாக 10 மொழிகளில் ஒரு பாடல் எழுதியுள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள் ” என்று தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கும் பாடல்களில் அர்த்தம் இல்லாத, ஆனால் கேட்க புதிதாக இருக்கிற வார்த்தைகளைப் பயன்படுத்துவார். ஆதவன் படத்தில் ” டமக்கு டமக்கு டம டம்மா..” ” ஷசிலி பிசிலி ஷசக்கலி..” போன்ற பாடல்கள் வந்தன. வெவ்வேறு மொழி வார்த்தைகளை போட்டு இசையமைத்திருக்கும் பாட்டும் நிச்சயம் ஹிட்டாகும் என்கிறது ரசிகர்கள் வட்டம்.
நகையில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேசிய விஜய் சில பாடல்களையும் பாடினார். கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கூச்சலும் அலறலுமாகவே இருந்தது. விஜய்யே மேடைக்கு வந்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டும் அவர் ரசிகர்கள் கேட்பதாக இல்லை.
நான் மீனவ நண்பன் படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன விஜய் கடல் மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்... என்று எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினார்.
நான் மீனவ நண்பன் படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன விஜய் கடல் மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்... என்று எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினார்.
அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி முடித்த விஜய் என் படத்தைப் பற்றியும் சில விஷயங்கள் பேச நினைக்கிறேன். காவலன் பல தடைகளை தாண்டி வெளிவந்தது. அதற்கு நீங்கள் ஆதரவு கொடுத்து வெற்றிப் படமாக கொண்டாடினீர்கள். இப்போது வேலாயுதம் நடந்து கொண்டு இருக்கிறது. இது உங்களுக்கு பிடித்த வகை மாஸ் படமாகவே இருக்கும்.
நான் 51 படங்கள் நடித்து விட்டேன். இத்தனைப் படங்களில் எனக்கு கிடைக்காத பாடல் எனக்கு வேலாயுதம் படத்தில் அமைந்தது. அது உங்களைப் பற்றிய பாடல். நான் எப்போதும் உங்களுக்கா இருக்கிறேன் என்று சொல்லி, கொஞ்சம் அமைதி காத்தீர்கள் என்றால் அந்தப் பாடலை பாடுகிறேன் என்றார். ஆனால் விஜய் எவ்வளவோ கையசைதாலும் ரசிகர் அமைதியாவது போல் தெரியவில்லை.
வேறு வழியில்லை என் நினைத்த விஜய் அந்த பாடலை உரக்கக் கத்திப் பாடினார். அவர் கத்த... பதிலுக்கு அவர் ரசிகர்கள் கத்த... ஒரேக் கதறல் தான்! விஜய் ரசிகர்களை உருக வைத்த வேலாயுதம் படத்தின் அந்தப் பாடல் இதோ...
விஜயின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் வேலாயுதம் .விஜய் ஜெனிலியா ஹன்சிகா கூட்டணியில் இப்படம் ஜூன் மாதம் 22 ம் திகதி விஜயின் பிறந்த நாளன்று வெளிவர உள்ளது.இப்படத்தின் தயாரிப்பாளர் பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம் ரவிச்சந்திரன் ஆவார்.இப்படத்தின் தொடக்கவிழாவையே விஜய் ரசிகர் முண்ணிலையில் சிறப்பாக கொண்டாடினார்.படத்தின் தொடக்கவிழா அன்று ஒரு ரெயிலர் வெளியிடப்பட்டது.இப்படத்தின் ரெயிலர் பிரமிப்பை ஏற்படுத்தியது.இப்படத்தின் ஆடியோ வெளியீடன்று இன்னும் ஒரு ரெயிலர் வெளியிட உள்ளார் ரவி.அதற்குரிய ஏற்பாடுகள் இப்போது நடைபெறுகின்றன.இப்படத்தின் போஸ்ட்புரடெக்சன் வேலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறப்பாக நகர்கிறது வேலாயுத வேலைகள்.இப்படத்தின் விளம்பரத்தை மே மாதம் தொடங்கவுள்ளார் ரவி.இப்படத்தின் ஆடியோ மே மாதம் 14 ம் திகதி வெளியிடப்படும் எனக்கூறப்படுகிறது எனினும் இது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்பவர்களிடம் சென்று பேசி வருகின்றனர்.எனினும் சிலர் ஓகே சொல்லிவிட்டனர் எனினும் அச்செய்தியையும் இரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.ரஜனி கமலிடம் கேட்கப்பட்டு வருகிறது.இப்படத்தின் ஆடியோவை சொனி மியூசிக் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இப்படத்தின் சட்டலைட் உரிமயை சன் ரீவி மற்றும் விஜய் ரீவீ வாங்க போட்டி போடுகின்றன.இப்படத்தை தமிழகம் முழுவதும் ஆஸ்கார் பிலிமே வெளியிடுகிறது.வேலாயுதம் பட விளம்பர ஸ்டில்களை உங்கள் அபிமான நாளிதழ்களில் மே மாதம் காணத்தயாராகுங்கள்.
தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் மெகா ஹிட் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் விஜயின் காவலன் திரைப்படம் இன்று நூறாவது நாளைக்கொண்டாடியது.விஜயின் இப்படம் விஜய் ரசிகர்களல் மட்டும் அல்ல சினிமா ரசிகர்களாலும் விரும்பி ரசிக்கப்பட்ட படமாகும்.இப்படத்தின் நூறாவது நாளை கொண்டாட விஜய் ரசிகர்கள் சத்தியம் தியேட்டருக்கும் முன்னால் ஒன்று கூடி கேக் வெட்டிக்கொண்டாடினர் அந்த காட்சியை கிழ் உள்ள படத்தில் காணலாம்
ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிப்பில் மிக அதிக பொருட்செலவில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். பல கோடி முதலீட்டில் தயாராகும் இந்த படத்தை வெற்றிபட இயக்குனரான எம்.ராஜா இயக்கி வருகிறார். ஜெனிலியா, அன்ஸிகா. சரண்யா மோகன் மற்றும் சந்தானம், எம்.எஸ்பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயஜிஷின்டே ஆகியோர் சிறந்த கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக மும்பையில் இருந்து 14 வில்லன் நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை விஜய் ஆண்டனி. ஓளிப்பதிவு ப்ரியன்.
ஆஸ்கார் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் விஜய், பால்காரர் கதாபாத்திரத்திலும் சரண்யா மோகன் விஜயின் தங்கையாகவும் படத்தில் இடம் பெறுகிறார். ஜெனிலியா பத்திரிக்கையாளராகவும் அன்ஸிகா, விஜயை காதலிப்பவராகவும் வருகிறார். படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகிறது. ஸ்டெண்ட் மாஸ்டர் அனல் அரசின் ஆறு ஆபத்தான சண்டை காட்சிகளில் விஜய் தூள் கிளப்புகிறார்.
வேலாயுதம், விஜயின் பிறந்த நாளான ஜீன் 22 தேதிவாக்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் பிரமாண்ட வசூலை தருகிற படமாக வேலாயுதம் இருக்கும்.
விஜய் நடிப்பில் பல எதிர்ப்புகளை தாண்டி பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் காவலன்.இது விஜயின் 51 வது படமாகும்.இதில் விஜய் அஸின் வடிவேலு நிழல்கள் ரவி ரோஜா மித்ரா ராஜ்கிரன் என பல நட்சத்திரப்பட்டாளமே நடித்தனர்.இத்திரைப்படம் வெளியாகிய போதும் அதிகளவான தியேட்டர்கள் கிடைக்கவில்லை.விஜயின் முந்தைய படமான சுறா அடைந்த தோல்வியால் தியேட்டர் உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பும் ஏனைய படங்களின் வருகையும் தியேட்டர் பற்றாக்குறைக்கு காரணமாயின.எனினும் படம் வெளியான பின்பு படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடிக்கவே பின்பு பல தியேட்டர்கள் இதில் இணைந்து கொண்டன.இப்படம் ஜெனவரி 15 ம் திகதி தமிழர்களின் பொங்கல் பண்டிகை ஸ்பெசலாக வந்து இன்று ஏப்ரல் 24 ம் திகதி காவலன் நூறாவது நாள் வெற்றிவிழாவை கொண்டாடுகிறது.காவலன் நூறாவது நாளை எட்டிய போதும் காவலன் ஆறு தியேட்டர்களில் இன்றும் ஓடுகிறது என்பது ஒரு சந்தோசமான செய்தியாகும்.நூறாவது நாளை கொண்டாடும் காவலன் திரைப்படத்திற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.நூறாவது நாள் கொண்டாட்டத்திற்காக அதிகளவான விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து சத்தியம் சினிமாவில் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.இப்பட வெற்றி விழா விரைவில் கொண்டாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா பங்கேற்பார் என்று உறுதியாகக் கூறிவருகிறார்கள். ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு விஜய்க்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையிலான உறவு கெட ஆரம்பித்தது. குறிப்பாக விஜய்யின் காவலன் படத்துக்கு பிரச்சினை ஏற்பட்ட போது, அது திமுக அரசுக்கு எதிரான விஜய்யின் கோபமாக மாறியது.இதன் விளைவு, எம்ஜிஆர் காலத்திலும் கூட திமுகவுக்கு நெருக்கமானவராக இருந்த இயக்குநரும் விஜய் தந்தையுமான எஸ். ஏ.சந்திரசேகரன், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவில் இணைந்து போட்டியிடக்கூடும் என்றெல்லாம் கூறப்பட்டது. அந்த நேரத்தில் எஸ்ஏசி இயக்கி வந்த ‘சட்டப்படி குற்றம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.ஆனால், ஜெயலலிதா இந்த விழாவுக்கு வரவில்லை. “தேர்தல் பிரச்சாரத்திற்கு சில நாட்களே இருப்பதால் இன்னொரு பெரிய விழாவில் நிச்சயம் பங்கேற்பேன்” என்று உறுதி அளித்திருந்தாரார்.இந்த நிலையில், தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் நேரடியாகக் களம் இறங்காவிட்டாலும், அவரது மக்கள் இயக்கம் அதிமுகவுக்காக வேலை பார்த்தது. எஸ்ஏசி தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டது.தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் பதட்டமான சூழ்நிலையில் விஜய் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இந்த தாக்குதலுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.இந்த நிலையில் விஜய் நடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ‘வேலாயுதம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இந்த விழாவிற்கு தலைமையேற்று சிறப்பித்து தருவதாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உறுதி அளித்துள்ளாராம் ஜெயலலிதா. இந்தத் தகவல் விஜய் ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளது.இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனோ, படத்தை எந்த அரசியல் சாயமும் இல்லாமல் வெளிக் கொண்டு வந்தால் போதும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறார். எனவே ஜெயலலிதா இந்த விழாவுக்கு வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் திமுக தரப்பினர் மீது கொண்ட கோபத்தால் அதிமுகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார். பல ஆண்டுகளாக திமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்த விஜய் தந்தை எஸ். ஏ.சந்திரசேகர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து தான் இயக்கிய ‘’சட்டப்படி குற்றம்’’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு
ஜெயலலிதாவை தலைமையேற்குமாறு கேட்டார். அதற்கு ஜெயலலிதா, ‘’தேர்தல் பிரச்சாரத்திற்கு சில நாட்களே இருப்பதால் இப்போது என்னால் இந்த விழாவில் பங்கேற்க முடியாது. அதனால் இன்னொரு பெரிய விழாவில் நிச்சயம் பங்கேற்று சிறப்பித்து தருகிறேன் என்று உறுதி அளித்தார். பின்னர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவாரா? மாட்டாரா? என்று சூழல் இருந்தது.
இந்த நிலையில் எஸ்.ஏ.சி. ஜெயலலிதாவிடம், ‘’விஜய் வேனில் சென்று பிரச்சாரம் செய்வதற்கு இப்போது விரும்பவில்லை. அதனால் கூட்டணிக்கட்சியின் பொதுக்கூட்டம் நடத்துங்கள். அதில் விஜய் பங்கேற்று பேசுவார் என்று கூறியிருந்தார்.கூட்டணிக்கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் விஜய் பங்கேற்கவில்லை. ஆனால் மேடையில் கூட்டணிக் கட்சியினரோடு விஜய்யின் படமும் இடம்பெற்றிருந்தது.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் பதட்டமான சூழ்நிலையில் விஜய் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இந்த தாக்குதலுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் விஜய் நடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ‘’வேலாயுதம்’’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த விழாவிற்கு தலைமையேற்று சிறப்பித்து தருவதாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உறுதி
காவலன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
* மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை. சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை.
*. படம் ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளது. இந்த காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அழககாக, புதுவிதமாக சொல்லும் படமாக இயக்கி இருக்கிறார் ராஜா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் படத்திற்கு பிறகு இப்படியொரு அண்ணன், தங்கை பாசத்தை எந்தபடத்திலும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.
* கிராமமும், நகரமுமாக மாறி, மாறி பயணக்கிறது வேலாயுதம் படத்தின் கதை. கிராமத்துக் கிளர்ச்சியையும், நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்க காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன.
* படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். அவன் விற்பது பால். ஆனால் அன்பால், நட்பால், பிறரையெல்லாம் தன்பால் ஈர்க்கிறான். அவர் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது அதுபோலத்தான் இந்த வேலு(விஜய்) அந்த ஊருக்கு. காதலனாக, பாசமுள்ள அண்ணனாக, ஆவேச இளைஞனாக விஜய்க்கு ஜீசல்பந்தி நடத்து வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.
* படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா, மற்றொருவர் ஹன்சிகா மோத்வானி. இவர்களுடன் சந்தானம் காமெடியில் தன் பங்கிற்கு அசத்த இருக்கிறார்.
* படத்தில் பாலிவுட்டை சேர்ந்த இரண்டு பிரபல வில்லன்கள் உட்பட 15 வில்லன்கள் நடித்திருக்கின்றனர்.
* படத்தில் ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு திருமண காட்சியை அமைத்துள்ளனர். இந்த திருமணத்திற்காக ஊரே பந்தல்போட்டு, கோலம் போட்டு, சீரியல் லைட்கடடி, தோரணம் அமைத்து ஊர்திருவிழா போல் அலங்காரம் செய்து ஆராவரம் செய்திருப்பது பிரமாண்டமான முயற்சி. ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஒரு ஊரே முன்னின்று நடத்தி வைத்துள்ள அந்த திருமணக்காட்சி, இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு படத்திலும் அமைந்ததில்லை.
* வேலாயுதம் படத்திற்காக அந்த ஊரில் ஒரு கிணறு வெட்டி, அதை அன்பளிப்பாக அந்த ஊருக்கே அளித்திருக்கின்றனர்.
* நடிகர்திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த பாசமலர் படத்தினை புதுபிரிண்ட் போட் அந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸில் போட்டு காட்டி மக்கள் பார்ப்பது போன்ற காட்சி படமான போது அனைவரும் படத்தில் மூழ்கிக் கிடக்க டைரக்டர் கட் சொல்ல மறந்து விட்டாராம்.
* படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை சுமார் ரூ.2 கோடி செலவில் திருமூர்த்திமலையில் படமாகியுள்ளனர். ஏற்கனவே “சிவகாசி”, “போக்கிரி” படங்களில் விஜய்க்கு ஓபனிங் சாங்கிற்கு நடனம் அமைத்த அசோக்ராஜ், இப்பாட்டுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். கிராமத்து தப்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற ஏராளமான ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் 200கிராமத்து நடன கலைஞர்கள் நயம்காட்ட 150 வெளிநாட்டு நடனக்காரர்கள் ஆடி வெளிநாட்டுக்கலை நயம் காட்டியுள்ளனர். படத்தில் விஜய் எப்படி ஒரு பிரம்மாண்டமோ அதுபோல இந்தபாடலும் பலமடங்கு பிரம்மாண்டமாக இருக்குமாம்.
* இப்படத்தின் சூட்டிங்கில் விஜய் நடிக்க தொடங்கியது முதல் முடியும் வரை ஒருநாள்கூட லேட்டாக வந்ததில்லையாம். அவரால் ஐந்து நிமிடம் கூட சூட்டிங் தாமதமானதில்லையாம். படத்தில் ஒவ்வொரு காட்சியையும், உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்து கொடுத்திருப்பதாக கூறும் இயக்குநர், விஜய்க்கு இந்தபடம் உச்சகட்ட காமெடி படமாகவும் அமையும் என்று கூறுகிறார்.
* படத்தின் தூணாக ஒளிப்பதிவாளர் ப்ரியன் அமைந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம். இவர் ஏற்கனவே சாமி, திமிரு, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
* வேட்டைக்காரன் படத்தை மிஞ்சும் வகையில் இப்படத்தின் இசை வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தில் விஜய்யை பாடவைக்கலாம் என்று முயற்சித்து இருக்கிறார். ஆனால் கடைசியில் விஜய் ஆண்டனியை பாடும்படி செய்துவிட்டார் விஜய்.
* படத்தில் மொத்தம் 5பாடல்கள், 6சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர்.