இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, July 21

வேலாயுதம் படத்திற்கு போட்ட பட்ஜெட்டை விட ரூ.10 கோடி செலவு

விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு போட்ட பட்ஜெட்டை விட ரூ.10 கோடி அதிகமாகிவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அதேசமயம் விஜய் படம் என்பதால், போட்ட காசை எடுத்த விடலாம் என்று நம்பிக்கையிலும் இருக்கிறார். "காவலன்" படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் "வேலாயுதம்". விஜய்யுடன், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ‌"ஜெயம்" ராஜா இயக்குகிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்காக ஆரம்பத்தில் போடப்பட்ட பட்ஜெட் ரூ.35கோடியாம். ஆனால் இப்போது படத்தில் கம்யூட்டர் கிராபிக்ஸ், பாடல்கள் பிரம்மாண்டம் அது, இது என்று ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சற்று கலக்கத்தில் இருக்கிறாராம். ஆனால் அதே சமயம், இது விஜய் படம், கவலைப்படாதீர்கள் போட்ட காசுக்கு மேலாக எடுத்துவிடலாம் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருவதால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாராம்.

விஜய் படம் என்றாலே அதிரடி ஆக்ஷன், கலக்கல் சாங்ஸ், காமெடி, காதல், செண்டிமென்ட் என்று எல்லாமே இருக்க வேண்டும் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதேபோல், இந்தபடத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கு பொறுத்திருந்து பார்ப்போம்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...