இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, July 9

சீமானுக்கு கால்ஷீட் ஒதுக்கினார் விஜய்!


பகவலன், கோபம் என பல பெயர்களில் செய்தி வெளியாகி, பின்னர் படத்தை ட்ராப்பும் ஆக்கி விட்டன என்று செய்திகள் வந்தன.

விஜய்-சீமான் கூட்டணி இன்னமும் உடையவில்லை என்பதை விலாவரியாக விளக்குகிறது இந்த தகவல். படத்திற்கான வேலைகளை தொடங்கிய நேரத்தில் சீமான் சிறை சென்றார்.

சிறைக்குள் இருந்தே படத்தின் ஸ்கிரிப்ட் அனைத்தையும் எழுதி முடித்து விட்டேன், என்று சீமானே கூறினார். அதன் பின்னர் தமிழகத்தில் தேர்தல் நெருங்கியது. தேர்தல் பிரசார களத்தில் வீராவேசமாக களமிறங்கினார் சீமான்.

சத்தமில்லாமல் சைலண்ட்டாக களமிறங்கினார் விஜய். தேர்தல் முடிவு இருவருக்கும் சாதகமாக வந்ததைத் தொடர்ந்து மீண்டும் பகலவன் பேச்சு எழுந்தது. ஆனால் இருவருமே அதுபற்றி பேசவில்லை.

இந்நிலையில்தான் சீமானுக்காக விஜய் ஒரே நேரத்தில் 60 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் அக்டோபர் 2ம்தேதி புதிய படம் தொடங்கும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...