இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, July 30

வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும்




விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், சீமான் ஆகியோரின் படங்களில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானாலும் விஜய் தரப்பில் இருந்து எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்று உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் விஜய் - கெளதம் மேனன் படத்தினை உறுதி செய்து இருக்கிறார்கள். யோஹன் -அத்தியாயம் ஒன்று (ஒன்றாம் குறிக்கோள் : நியூயார்க்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார் கவுதம் மேனன். இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக் லைனாக ‘மிஷன் -1 நியூயார்க் சிட்டி’ என குறிப்பிட்டுள்ளனர்.
வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கௌதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இசை ஏ. ஆர். ரஹ்மான், ஒளிப்பதி மனோஜ் பரமஹம்ஸா, பாடல்கள் தாமரை. இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் அமெரிக்காவில் நடைபெற உள்ளதாம்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...