

தமிழில் வித்தியாசமான படங்களை இயக்கக்கூடியவர் ஏ.ஆர்.முருகதாஸ், வியாபார நோக்கில் மசாலா படங்களைத் தரக்ககூடிய நடிகர் விஜய் இருவரும் இணைந்து ஒரு படத்தை தரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தின் பெயர் மாலை நேரம் மழைத்துளி
முருகதாஸ் தற்போது இயக்கி வரும் ஏழாம் அறிவுமுடியும் தருவாயில் உள்ளது. விஜயின் வேலாயுதம் முடிந்துள்ள நிலையில் நண்பன் படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. இந்த படங்களின் வேலைகள் முடிந்த கையோடு இருவரும் அடுத்த படத்தில் இணையவுள்ளனர்.
படத்தை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஆஸ்கார் பில்ம்ஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு பெரும்பாலும் நிரவ்ஷா என குறிப்பிடப்படுகிறது. இசை ஹரிஸ் ஜெயராஜ். நாயகியாக தீபிகா படுகோனின் பெயர் தற்போதைய பட்டியலில் உள்ளது.













0 Comments:
Post a Comment