இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, July 23

ஷங்கர், விஜய் விழாவுக்கு வராதது ஏன்?


வருத்தத்தில் இருப்பதாக முணுமுணுப்பு எழுந்தது கோடம்பாக்கத்தில். ஏன் வரவில்லை என்று விசாரித்தால், "எப்படி வருவாங்களாம்...?" என்ற கேள்வியே மிஞ்சுகிறது. அப்படியென்ன நடந்தது பின்னணியில்?

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முதல் நாள் கூட சென்னையில்தான் நடந்தது நண்பன் படப்பிடிப்பு. மறுநாளும் படப்பிடிப்பு தொடரும் நிலையில், அப்படியே ஷ§ட்டிங்கை முடிச்சுட்டு வந்திருங்களேன் என்று அழைத்தார்களாம் ரௌத்திரத்தை வாங்கி வெளியிட முன் வந்திருக்கும் ஜெமினி லேப் நிறுவனத்தினர்.

இதே நிறுவனம் தயாரிக்கும் படம்தான் நண்பன். அதன் காரணமாகவும், ஆர்.பி.சவுத்ரி மீதிருக்கும் அன்பின் காரணமாகவும் வருவதாக ஒப்புக் கொண்டார்களாம் இலியானா, ஷங்கர், விஜய் மூவரும்.

அப்புறம் ஏங்க வரல?

வேறொன்றுமில்லை, நாள் முழுக்க இவர்களுடனேயே படப்பிடிப்பில் இருந்த ஜீவா, ஒரு வார்த்தை கூட வாங்க என்று அழைக்கவில்லையாம் இவர்களை. யார் யாரோ அழைக்கும் போது படத்தின் ஹீரோ, அதுவும் கூடவே இருந்தவர் அழைக்காமல் போனால் எந்த முகத்தோடு அங்கு செல்ல முடியும்? விடுங்க... போக வேண்டாம் என்றாராம் ஷங்கர்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...