இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, July 8

கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு:நடிகர் இளைய தளபதி விஜய், வாழ்த்து


நடிகர் சிவக்குமாரின் மகன், நடிகர் கார்த்தியின் திருமண வரவேற்பு சென்னையில் நேற்று நடந்தது.

கார்த்தி-ரஞ்சினி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. மணமக்கள் கார்த்தி-ரஞ்சனி மாலை 6.30 மணிக்கு ஜோடியாக மணமேடைக்கு வந்தார்கள்.

கார்த்தி கறுப்பு நிறத்தில் கோட்-சூட் அணிந்திருந்தார். ரஞ்சினி ரோஜா நிறத்தில் சேலை-ஜாக்கெட் அணிந்திருந்தார்.

மணமக்களை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழர் தேசிய கட்சி தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லகண்ணு, செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி. மலைசாமி, தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பத்திரிகையாளர் சோ, வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், எல்.சுரேஷ், ராம்குமார், கலைஞானம், முக்தா சீனிவாசன், ஏவி.எம்.முருகன், எஸ்.ஏ.ராஜ்கண்ணு, கோவை மணி, கே.பாலு, திருப்பூர் மணி, ஏ.எல்.அழகப்பன், கோவை தம்பி, டைரக்டர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா, வசந்த், விக்ரமன், எழில், சமுத்திரகனி, பேரரசு, ஹரி, கரு.பழனியப்பன், சுரேஷ்மேனன், பார்த்திபன், தங்கர்பச்சான், பிரியா, ஏ.ஆர்.முருகதாஸ், ராதா மோகன்.

நடிகர்கள் விஜய், சத்யராஜ், சிபிராஜ், ஆனந்தராஜ், சத்யன், பிரசன்னா, பரத், ஜெய், அனுமோகன், பிரகாஷ்ராஜ், மோகன், எஸ்.வி.சேகர், விவேக், ராஜேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், செந்தில், தியாகு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார். நடிகைகள் மீனா, சுஹாசினி, மனோரமா, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, நக்மா, லட்சுமி, ஷோபனா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், சீர்காழி சிவசிதம்பரம், பாடகி பி.சுசிலா, கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் செட்டியார், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, கணேஷ், டான்ஸ்மாஸ்டர் ரகுராம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைவரையும் நடிகர் சிவக்குமார், அவருடைய மனைவி லட்சுமி, மகன் சூர்யா, மகள் பிருந்தா, மருமகள் ஜோதிகா ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...