இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, July 12

விஜய்’யுடன் இணையும் அஜீத்!!

அஜீத்தும் விஜய்யும் சேர்ந்துதான் அடுத்தபடம் பண்ணுகிறார்களோ என தப்பா நினைத்துவிட வேண்டாம். இந்த விஜய் இயக்குநர். மதராசபட்டணம் பட இயக்குநர் விஜய்யும் அஜீத்தும் மீண்டும் சேரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு அறிமுகப் படம் தந்தவரே அஜீத்தான். இவர் நடித்த கிரீடம் படமே விஜய்யின் முதல் படம்.

மதராசப்பட்டணம் படத்தைப் பார்த்ததிலிருந்தே, விஜய்யுடன் மீண்டும் இணைய வேண்டும் என கூறிவந்தாராம் அஜீத். பில்லா 2 படம்தான் அஜீத்தின் அடுத்த படம் என எல்லாரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென விஜய்யை அலுவலகத்துக்கு வரவழைத்த அஜீத், அதிரடி ஆக்ஷன் கதையோடு வாங்க, நாம படம் பண்றோம் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் விஜய்யின் கதை, அதற்கு அவர் கொடுத்திருந்த ட்ரீட்மெண்ட் எல்லாமே பிடித்துப் போனதால், படத்தை துவங்க பச்சைக் கொடியும் காட்டிவிட்டார் ‘தல.’

அப்படியானால் பில்லா 2?

அதுவும் உண்டாம். ஆனால் அதற்கு முன்பே விஜய்யின் படத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.



    0 Comments:

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...