இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, July 30

விஜய் என் தம்பி புதிய ரூட்டில் அஜீத்!

அஜீத், மரியாதை நிமித்தமாக கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை, அஜீத் தன்னுடைய படத்தின் ப்ரொமோவுக்கு வருவதில்லை போன்ற செய்திகள் தற்போது அதிக அளவில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு பதிலளித்துள்ள அஜீத் "எனக்கு அரசியலில் எல்லோரும் நண்பர்கள்தான், ஆனால் சினிமாவில்தான் எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள், அவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். என்படத்திற்கு எப்போதும் பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று பத்திரிக்கைகள் சொல்லி வருகின்றன அந்த ஓப்பனிங்கை கெடுக்கவேண்டும் என்ற நோக்கில் என்படம் ரிலீசாகும் சமயத்திலெல்லாம் என்னைப்பற்றிய வேண்டாத செய்திகளை கிளப்பி விடுகின்றனர்" என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் பாய்ட் அவுட் செய்வது விஜய் தரப்பையா? என்ற கேள்விக்கு "விஜய் என் தம்பி. அவர் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டார். அவருக்கும் எனக்கும் ஏதோ தகராறு போல் சித்தரிப்பதே தேவையில்லாத விசயம்" என்றும் விளக்கமளித்துள்ளார்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...