இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Sunday, July 24

ஆகஸ்ட் 28-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது

திய தலைவரை தீர்மானிக்க வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த ராம நாராயணன் பதவி விலகினார். தற்காலிக தலைவராக எஸ் ஏ சந்திரசேகரன் பொறுப்பேற்றார்.


இவர் இந்த பதவியில் தொடர, சங்கத்தின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு காட்டி வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பட அதிபர்கள் சங்க பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர் கே.முரளீதரன், பொருளாளர் காஜா மைதீன் உள்பட பல பட அதிபர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காலியாக உள்ள செயலாளர் பதவிக்கு பொறுப்பு செயலாளராக கதிரேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது, சங்கத்தின் புதிய தலைவர் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...