இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, July 7

விஜய்யைப் போல் உழையுங்கள் ! : எஸ்.ஏ.சந்திரசேகரன்

நடந்து முடிந்த தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளித்தது. ஆனால் விஜய் தேர்தல் நேரத்தில் அறிக்கையோ பேட்டியோ எதுவும் அளிக்கவில்லை.

ஆனால் தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று ( ஜுலை 6 ) நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது :

" விஜய் இன்னும் ஆண்டுக்கு 2 படங்கள் வீதம், வரும் ஐந்து வருடங்களுக்கும் நடிக்க வேண்டியது இருப்பதால் இன்னும் ஒரு ஐந்து வருடங்களுக்கு அவர் நேரடி அரசியலில் ஈடுபட மாட்டார்.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. அணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று நான் தான் சொன்னேன். அப்போது நான் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு முழு மூச்சாக உழைத்தீர்கள். அதேபோல் நான் உங்களை வழிநடத்துவேன். விஜய் நமக்கு பின்னாடி இருப்பார்.

அவர் தான் நம் தலைவர். அவர் தான் நம் சக்தி. அந்த சக்தியை நாம் கேடயமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி மக்கள் பணி செய்ய வேண்டும்.

மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவர்களது வார்டுகளில் உள்ள மொத்த ஓட்டுகளில் பாதி பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். உங்கள் வார்டுகளில் பாதி பேரை உறுப்பினர்களாக சேர்த்தவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து என்னை சந்திக்க வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உங்களுக்கு நான் சீட் வாங்கி தருகிறேன்.

விஜய்யை முதலில் நடிகராக அறிமுகப்படுத்திய போது, இவனை போட்டு படம் எடுக்கிறாரே சந்திரசேகரனுக்கு என்ன கிறுக்கா? என்று சொன்னார்கள். ஆனால் இன்று விஜய் இளைய தளபதி. அவரைப் போல் உழையுங்கள்.

விஜய்யின் மக்கள் இயக்கத்தை வைத்து கவுன்சிலராக ஆனேன், எம்.எல்.ஏ. ஆக ஆனேன் என்று நீங்கள் சொல்ல வேண்டும், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள். " என்று கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...