இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, July 5

கவுண்டமனி வீட்டில் 'வேலாயுதம்' படப்பிடிப்பு

விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தில் ஹன்சிகா, ஜெனிலியா நாயகிகளாக நடித்து வருகிறார்கள். இவர்களுடன் 15 வில்லன்கள், 30 காமெடியன்கள் உண்டு. இத்தனை பேரையும் மீறி ஒரு இப்படத்தில் ஒரு 'ஊர்' குணச்சித்திர வேடம் ஏற்றுள்ளாதம். அது வல்லாகுண்டாபுரம். இந்த ஊர் தான் கவுண்டமணியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலவகைகளில் கதைக்கும் பொருத்தமாக இருந்ததால் அவ்வூரை தேர்வு செய்து 'வேலாயுதம்' படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்களாம்.

கதைப்படி விஜய் ஒரு பால்காரன். பெயர் வேலு.

ஊரில் ஒருவனாக இருக்கும் வேலு எப்படி ஊருக்கே ஒருவனாக உயர்கிறார் என்பதே கதை.அப்படத்தில் வரும் விஜய்யின் தங்கையான சரண்யா மோகனின் கல்யாண காட்சி படப்பிடிப்பு நடந்தபோது அவ்வூரில் இருக்கும் அனைவருமே தங்கள் வீட்டு விழா போல் எண்ணி கொண்டாடினார்களாம்.
படத்தில் அக்காட்சி வரும் போது நிஜத்திருமணக்காட்சி போலவே இருக்குமாம். படத்திற்காக ஒரு கிணறு தோண்டி அழகாக கட்டப்பட்டதாம். படப்பிடிப்பு முடிந்தவுடன் தயாரிப்பாளர் அக்கிணற்றை அன்பளிப்பாக அக்கிராமத்துக்கு கொடுத்து விட்டாராம்.

இந்த வல்லகுண்டாபுரத்திற்கு இதுவரை கவுண்டமனி பிறந்த ஊர் என்ற முகவரி இருந்தது. இனி 'வேலாயுதம்' படப்பிடிப்பு நடந்த ஊர் என்ற புகழும் சேர்ந்து கொள்ளும் என்று சொல்கிறது படக்குழு.

கவுண்டமணியின் வீட்டிலும் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்களாம். கவுண்டமணியின் தாயாருடன் குழுவினர் சந்தித்துப் பேசி, அவரது வாழ்த்தை பெற்று இருக்கிறதாம் படக்குழு.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...