சர்ச்சைகளில் சிக்குவது ஜெனிலியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் நடித்துவிட்ட தேசிய நடிகை ஜெனிலியாவுக்கு தற்போது பாகிஸ்தானிய சினிமாவில் நடிக்கவும் அழைப்பு வந்திருகிறது. சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜெனிலியா, இன்னோரு பக்கம் தனது காதலருக்காவும் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இதனால் சிம்புவின் 'வேட்டை மன்னன்' படத்தில் நடிக்க அழைத்தும் தமிழில் தொடர்ந்து படங்களை ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் தற்போது விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் மட்டுமே நடித்து கொடுத்திருகிறார். இவரது காதலர் பாலிவுட் ஹீரோவுமான, மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக் ஆகஸ்ட் முதல்வாரத்தில் தனது ஜாதகப்படி திருமணம் செய்துகொள்வது திருமண வாழ்கைக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நெருக்கடி கொடுப்பதால் விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட 'வேலாயுதம்' படத்தின் தயாரிப்பாளர், ஜெனிலியாவுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளாரம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வேலாயுதம் ரிலீஸ் ஆகிறது. 'வேலாயுதம்' ரிலீஸ் ஆகி மூன்று வாரங்கள் கழித்தே திருமணம் செய்துகொள்ள வேண்டும். இது என் அன்புக்கட்டளை என்றாராம். இந்த வேண்டுகோளை ஜெனிலியா ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர் வட்டத்தில். ஜெனிலியா திருமணம் 'வேலாயுதம்' வசூலை பாதிக்கக் கூடாது என்று நினைக்கிறார் ஆஸ்கர் ரவி! எப்டியும் மனம் கவர்ந்தவரை மணக்கிறதுனு ஆகிப்போச்சு..... அது ஆடியானா என்ன ஆவணியானா என்ன?
Thursday, July 14
தயாரிப்பாளரின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்த ஜெனிலியா!
2:01:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment