இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, July 28

தமிழ் சூப்பர் ஹீரோ ஜீவா !

நடிகர் ஜீவா விஜய்யுடன் இனைந்து தற்போது நடித்து வரும் 'நண்பன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

'நண்பன்' படத்தை அடுத்து ஜீவா, மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படமும், கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க இருக்கிறார்.

செப்டம்பர் மாதம் முதல் மிஷ்கின் இயக்கும் 'முகமூடி' படத்தில் நடிக்க இருக்கிறார் ஜீவா. 2012 மே மாதம் இப்படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இப்படத்தை தயாரிக்கும் யு.டி.வி தனஞ்செயன் தனது டிவிட்டர் இணையத்தில் " முகமூடி படத்தின் ஆரம்பப் பணிகள் நன்றாக தயாராகிக் கொண்டிருக்கிறது. நான், மிஷ்கின், ஜீவா மூன்று பேரும் சுமார் நான்கு மணி நேரம் படம் குறித்து பேசினோம். படத்தின் TEASER அருமையாக வந்துள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும். 2012 மே 1ம் தேதி படம் வெளியிடப்படும். தமிழ் திரையுலகில் முதல் சூப்பர் ஹீரோ படம் இதுதான். படப்பிடிப்பு ஆரம்பிக்க ஆர்வத்துடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் நாயகியாக முதலில் அமலாபாலிடம் பேசி வந்தவர்கள் தற்போது அவரை இப்படத்தில் இருந்து நீக்கி விட்டார்களாம். புதுமுகம் ஒருவர் தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படலாம் என்கிறது படக்குழு.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...