
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி வருகிறார். மாணவ- மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களும் துவங்கியுள்ளார்.
சென்னை, புதுக்கோட்டா, புதுச்சேரி, பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இப்போது சேலத்தில் வருகிற 17-ந்தேதி ஏழை மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு தட்டுகள், மேஜை நாற்காலி ஆகிய பொருட்களும் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றுப் பேசுகிறார். விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மூன்று ரோடு பகுதியில் இதற்கான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
Monday, July 11
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு ரூ 8 லட்சம் உதவி!
6:47:00 PM
No comments
வருகிற ஜூலை 17-ம் தேதி சேலம் மாவட்ட மாணவ மாணவிகளுக்கு ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய்.
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment