இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, July 6

இளைய தளபதி விஜய் தான் படித்த பள்ளிக்கு சென்று வந்தார்

Vijay

கோலிவுட்டில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஜய். அவர் சமீபத்தில், தான் சிறு வயதில் படித்த விருகம்பாக்கத்திலுள்ள பாலலோக் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பள்ளிக்கு சென்று வந்தார்.

தங்களுக்கு பிடித்த நடிகரை கண்டு அங்குள்ள குழந்தைகள் மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது மட்டுமல்லாமல் , அவருடன் உரையாடி மகிழ்ந்தார்கள்.

அந்த பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியரான மீனா சுரேஷ் (விஜயின் பழைய ஆங்கில ஆசிரியரான அவர்) கூறியதாவது-"விஜய் ஒரு ஒழுக்கமான மற்றும் அமைதியான மாணவன். அவர் விளையாட்டுகளில் மிகவும் திறமையானவர்" என்று கூறினார்.

இந்நிலையில் விஜய் கூறியதாவது "எனது பழைய ஆசிரியர்களை சந்தத்தில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் படித்த வகுப்பறையை பார்த்த போது, எனது பள்ளி பருவ காலங்கள் நினைவிற்கு வந்தது. இந்த அனுபவம் சந்தோஷாமாக இருந்தது. நான் படித்த இந்த பள்ளிக்கு வர அனுமதித்த தலைமை ஆசிரியருக்கு மிகுந்த நன்றி" என்று கூறினார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...