ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் விஜயின் ஜோடியாக, ‘வேலாயுதம்’ படத்தில் நடித்து வருகிறார் ஜெனிலியா. இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஹன்சிகா மோட்வானியும் நடிக்கிறார். இறுதிக் கட்ட படப்பில் கலந்து கொள்ள இருந்த ஜெனிலியா, இப்படத்தில் நடிப்பது பற்றி கூறியதாவது; "இந்தப் படத்தின் கதையைப் பற்றி, ஜெயம் ராஜாசார் சொல்லும் போதே எனக்குப் பிடித்திருந்தது. அதே நேரத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட டி.வி. நிருபர் வேடத்தை சிறப்பாக செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் இயக்குனரோ, "உங்களால் இதை செய்ய முடியும். நீங்கதான் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமா இருக்கீங்க''ன்னு நிறைய நம்பிக்கை கொடுத்தார். ரொம்பவும் பவர் புல்லான ரோல் எனக்கு. விஜய்க்கு சமமாக என்னுடைய வேடமும் இருக்கும்ன்னா பார்த்துக்குங்களேன். வெறும் பந்தாவுக்காக இதை சொல்லவில்லை. ஹன்சிகா எனக்கு நல்ல தோழி. அவங்களுக்கான கேரக்டரில் அவங்க நடிக்கிறாங்க. எனக்கான கேரக்டரில் நான் நடிக்கிறேன்.
நான் சிட்டி பொண்ணுன்னா அவங்க பக்கா கிராமத்துப் பொண்ணா நடிச்சிருக்காங்க. ‘வேலாயுதம்' படத்தைப் பொறுத்தவரைஎங்க ரெண்டு பேருக்குமே நடிக்க ஸ்கோப் உள்ள வேடங்கள்தான் அமைஞ்சிருக்கு. நான் சொன்னதெல்லாம் உண்மைதான்னு படத்தை நீங்க பார்க்கும்போது கண்டிப்பா உங்களுக்கு புரியும்." என்றார்.
Saturday, July 2
வேலாயுதம்’ படத்தில் விஜய்க்கு இணையான கேரக்டர் எனக்கு: நடிகை ஜெனிலியா
8:12:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment