
Saturday, July 9
நண்பன் பட இறுதிக்கட்டப்படப்பிடிப்பு ஆரம்பம்!
8:15:00 PM
No comments
இளையதளபதி விஜய் நடிக்கும் நண்பன் பட இறுதிக்கட்டப்படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக உள்ளது.இப்படப்பிடிப்பு தொடர்ச்சியாக ஒரு மாதம் இடம்பெற உள்ளது. தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடப்போகிறது ஜெமினி பிலிம்ஸ்.ஜீவா இன்று இப்படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.இடக்னை தனது டுவிட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் ஜீவா. சங்கருடைய முதலாவது ரீமேக் படம் இதுவாகும். முதல்வன் இந்தியன் சிவாஜி ஜென்டில்மேன் ஜீன்ஸ் அந்நியன் எந்திரன் பாய்ஸ் ஆகிய பிரமாண்ட வெற்றிப்படங்களை கொடுத்த சங்கர் அப்படங்களுக்கு இணையாகவும் அதை விட ஒரு படி மேலாகவும் இப்படத்தை எடுக்கிறார்.இப்படத்தினை விரைவாகவும் நேர்த்தியாகவும் எடுத்து வருகிறார் சங்கர்.படத்தின் பாடல்களும் பிரமாண்டமாக அமைத்துள்ளார் சங்கர்.விஜய் சங்கர் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது ஏனெனில் இரு சிகரங்கள் இணையும் படம் என்பதனாலாகும்
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment