இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, July 27

நடிகர் விஜய், தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார்!

நடிகர் விஜய், தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார்! - அவரது தந்தை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வி
இலங்கையின் போர்க்குற்றவாளியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு நடிகர் விஜய் அவர்கள் ஆதரவு வழங்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அதனை நாமும் எமது செய்தித்தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

அத் தகவலின் உண்மை நிலையினை அறிந்து கொள்வதற்காக பிரபல திரைப்பட இயக்குனரும், இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தையாருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களை லங்காசிறி வானொலி நிறுவனத்தினர் தொடர்பு கொண்டபோது,

இளைய தளபதி விஜய் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக யாரும் சந்திக்கவில்லை எனவும்,

இளைய தளபதி விஜய் அவர்கள் கையெழுத்திட மறுக்கவில்லை எனவும்,

இது அரசியல் காரணங்களுக்காக ஒரு தரப்பினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட செய்தி எனவும்,

இளைய தளபதி விஜய் அவர்கள் தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார் எனவும் அவரது தந்தையாரான S.A சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தையார் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவத்தை நீங்கள் இங்கே கேட்கலாம்.

இது தொடர்புபட்ட செய்தி

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...