நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

விஜய் மக்கள் இயக்க தொண்டர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.

அவர், ’’விஜய் மக்கள் இயக்கத்தில் 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். அடையாள அட்டை வழங்கியதில் இருந்து கூடுதலாக 1 1/2 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் மாவட்டந்தோறும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

விஜய் நேரடியாக அரசியலுக்கு வராமல் உங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ரசிகர்கள் செய்யும் ஒவ்வொரு நலத்திட்ட பணிகளுக்கும் விஜய் முழு பக்க பலமாக இருப்பார். உங்கள் முயற்சிக்கு நான் துணை நிற்பேன்.

விஜய் அரசியல்வாதியாக இல்லாமல் உங்களோடு சேர்ந்து இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்வார்’’ என்று பேசினார்.