
;கடந்த நான்கு ஆண்டுகளாக திரை நட்சத்திரங்கள் திரளாக வந்து ரசித்த விருது வழங்கும் விழாவாக இருந்து வரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாகவும், புதுமாதிரியாகவும் நடத்த போகிறார்களாம். அதன் தொடக்கமாகவே விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், வரும் ஜூன் 1ம் தேதி சென்னையில் AVM ஸ்டுடியோவில் இருந்து காலை 10.30 மணியளவில் கொடியசைத்து அனுப்பப்படுகிறதாம்!இந்த விழாவிற்கு தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகர் திரைப்படத் தயாரிப்பாளர் AVM சரவணன், மேலும் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டு கொடியசைத்து ரசிகன் எக்ஸ்பிரச் வாகனத்தை வழியனுப்பி வைக்கின்றனராம்.ஐந்தாம் ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவில் தமிழ்த்திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று ஏராளமான விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. இந்த ரசிகன் எக்ஸ்ப்ரெஸ் வாகனத்தில் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட விருது வழங்கும் புகைப்படங்கள் மற்றும் பங்குகொண்ட கலைஞர்களில் படங்கள், படக்காட்சிகள் என்று மக்கள் விரும்பிப்பார்க்கும் அனைட்து விஷயங்களும் அடங்கியிருக்குமாம் சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சேலம், கரூர், வேலூர், காஞ்சிபுறம் ஆகிய மாவட்டங்களுக்கு மக்களின் வாக்குகளை சேகரிக்க சென்றுவரவுள்ளது.மக்களின் ஃபேவரெட் திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், பாடல் ஆகிய ஐந்து பிரிவுகளை நேயர்களே தேர்வு செய்வர். மீதமுள்ள பிரிபிரிவுகளுக்கான விருதுகளை விழா நடுவர்கள் தேர்வுசெய்வர்.
மேலும் தமிழ்த்திரைப்படத்துறையில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு செவாளியர் சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டு வருகிறது. விஜய் விருதுகளைப் பொறுத்தவரையில் முக்கிய விருதுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவது வரவேற்கப்படும் விஷயமாகும். ஜூன் மாதம் இறுதியில் விஜய் விருதுகள் பிரம்மாண்ட விழா சென்னையில் நடிபெறவிருக்கிறது. விஜய் அவார்ட்ஸ் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம் புறப்படுவது, விஜய் அவார்ட்ஸ் ஒரு முன்னோட்டம் மே 30 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல் சொல்லியிருக்கிறார்கள்!.
Tuesday, May 31
ஆரம்பித்தது விஜயின் எக்ஸ்பிரஸ் பயணம்!
9:54:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment