இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, May 31

அஜீத்தின் மங்காத்தாவில் விஜய் கெஸ்ட்ரோலில்...?

கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு விஜய், அஜீத் பற்றிய செய்தி தான். அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது. இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார். ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா…? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான்.

தற்போது மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் படத்தின் சூட்டிங் முடிந்து இறுதிகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படம் திரைக்கு வருகிறது.

வேலாயுதம்' படப்பிடிப்பில் ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

 'வேலாயுதம்' படப்பிடிப்பில் ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்











இயக்குநர் ஜெயம் ராஜா இன்று (மே 31) தனது பிறந்தநாளை வேலாயுதம் படப்பிடிப்பில் கொண்டாடினார். அவருக்கு விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

வேலாயுதம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இயங்கி வரும் இயக்குநர் ராஜாவுக்கு இன்று (மே 31) பிறந்தநாள். அவருக்கே தெரியாமல் நடிகர் விஜய் 'சேட்டை சாதுவிற்கு பிறந்த நாள் நல்வாத்துகள்' என எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய கேக்கை வரவைத்து படப்பிடிப்பின் இடைவேளையில் இயக்குநரை ஆச்சர்யப்படுத்தினார்.

விஜய், ஒளிப்பதிவாளர் ப்ரியன் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினரின் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை இயக்குநர் ராஜா கொண்டாடினார்.

இதேபோல நடிகை ஹன்சிகா, ஒளிப்பதிவாளர் ப்ரியன், சரண்யா மோகன் ஆகியோரின் பிறந்தநாளன்றும் விஜய் தான் கேக் வரவைத்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்தார்


Director 'Raja' Birthday celebration photos, Stills, Images

Director 'Raja' Birthday celebration photos, Stills, Images

Director 'Raja' Birthday celebration photos, Stills, Images


Director 'Raja' Birthday celebration photos, Stills, Images


Director 'Raja' Birthday celebration photos, Stills, Images

இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மாட்டேன்: ஹன்சிகா மொத்வானி

தெலுங்கிலிருந்து கோலிவுட் வந்த ஹன்சிகா மொத்வானி, மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகிய

படங்களில் நடித்து பட உலகில் வரவேற்பை பெற்றார்.

இப்போது விஜய்யுடன் இணைந்து வேலாயுதம்

உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திலும் நடித்து வருகிறார்.


தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடிக்க களமிறங்கியுள்ள ஹன்சிகா ஹீரோயின் ரோலில் மட்டுமே நடிப்பேன். இரண்டாவது ஹீரோயின் ரோலில் நடிக்க மாட்டேன் என்று உறுதியான முடிவை எடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.


நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நாளில் இருந்து, இரண்டாவது ஹீரோயின் ரோலில் மட்டும் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். நல்ல கேரக்டராக, ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்படியான ரோலில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.


தமிழில் நான் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் உற்சாகமடைந்துள்ளேன். தெலுங்கு பட வாய்ப்புகளும் வருகின்றன.


தில் ராஜு தெலுங்கில் எடுக்கும் படத்தில் ஹீரோ சித்தார்த்துடன் முன்னனி கதாநாயகியாக நடிக்கிறேன். கதாநாயகன் ராம் நடிக்கும் தெலுங்கு படத்தில் வரும் நாயகி ரோல் பேசப்படும் என்றும் ஹன்சிகா கூறியுள்ளாராம்.


பிஸியான அனுயா!

கோலிவுட்டில் சத்தமில்லாமல் முன்னேறி கொண்டு இருக்கிறார் நடிகை அனுயா. நண்பன், நான் என்று அடுத்தடுத்து இரண்டு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா, அதன்பின்னர் மதுரை சம்பவத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து அசத்தினார். தமிழில் வாய்ப்பு இல்லாமல் போன நடிகைகளின் பட்டியலில் சேர்ந்து இருந்த அனுயாவுக்கு இப்போது அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. தற்போது டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும், “நண்பன்” படத்தில் இலியானாவின் சகோதிரியாக நடிக்கிறார். “நண்பன்” படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் “நான்” படத்திலும் நடிக்க இருக்கிறார். நான் படத்தில் ஏற்கனவே திருதிரு துறுதுறு படத்தின் நாயகி ரூபா மஞ்சரி நடிக்கிறார், அவருடன் அனுயாவும் நடிக்கிறார்.

சிம்புவிற்கு கண்டிஷன் போட்ட இயக்குனர் அமீர்!

ameer-simbu

முன்பெல்லாம் தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம், அதை செய்ய மாட்டேன், இதை செய்ய மாட்டேன், இப்படித்தான் நடிப்பேன் என முரண்டு பிடித்ததால் சில ஹிட் பட வாய்ப்புகளை தவறவிட்டார்.

உதாரணத்திற்கு கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் வெளியான ‘கோ’, ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நண்பன்’ ஆகிய படங்களை சொல்ல்லாம்.

இந்நிலையில் இயக்குநர் அமீர், கதை சொல்ல சிம்புவை சந்தித்தார். கதையைப் பொறுமையாகக் கேட்ட சிம்பு, இடையிடையே சில திருத்தங்களைச் சொன்னாராம். அமீரும் செய்து விடலாம் என்று கதையினை சொல்லியிருக்கிறார்.

கதையைச் சொல்லி முடித்ததும் அடுக்கடுக்கான நிபந்தனைகளை சிம்புவுக்கு விதித்தாராம் அமீர். சிம்புவும் ‘கதை பிடித்திருப்பதால் இதை ஒப்புக் கொள்கிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார்.

இதற்கு இரு காரணங்கள் இருக்கிறது என கோலிவுட் கிசுகிசுக்கிறது. முதல் காரணம் ஷங்கரின் நண்பன் பட கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் சொன்னவர், திடீரென்று நடிக்காமல் விலகிக் கொண்டது. இரண்டாவது காரணம் நல்ல கதையை நழுவ விட்டால் நாம பிழைக்க முடியாது என நினைப்பது என கிசுகிசுக்கிறதாம்.

ஆரம்பித்தது விஜயின் எக்ஸ்பிரஸ் பயணம்!



விஜய் டிவியின் விஜய் விருதுகள் விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ் வண்டி தமிழ் நாடு முழுவதும் வலம்வந்து மக்களில் வாக்குகளை சேகரித்து அதன் அடிப்படையிலும் பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

;கடந்த நான்கு ஆண்டுகளாக திரை நட்சத்திரங்கள் திரளாக வந்து ரசித்த விருது வழங்கும் விழாவாக இருந்து வரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாகவும், புதுமாதிரியாகவும் நடத்த போகிறார்களாம். அதன் தொடக்கமாகவே விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், வரும் ஜூன் 1ம் தேதி சென்னையில் AVM ஸ்டுடியோவில் இருந்து காலை 10.30 மணியளவில் கொடியசைத்து அனுப்பப்படுகிறதாம்!இந்த விழாவிற்கு தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகர் திரைப்படத் தயாரிப்பாளர் AVM சரவணன், மேலும் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டு கொடியசைத்து ரசிகன் எக்ஸ்பிரச் வாகனத்தை வழியனுப்பி வைக்கின்றனராம்.ஐந்தாம் ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவில் தமிழ்த்திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று ஏராளமான விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. இந்த ரசிகன் எக்ஸ்ப்ரெஸ் வாகனத்தில் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட விருது வழங்கும் புகைப்படங்கள் மற்றும் பங்குகொண்ட கலைஞர்களில் படங்கள், படக்காட்சிகள் என்று மக்கள் விரும்பிப்பார்க்கும் அனைட்து விஷயங்களும் அடங்கியிருக்குமாம் சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சேலம், கரூர், வேலூர், காஞ்சிபுறம் ஆகிய மாவட்டங்களுக்கு மக்களின் வாக்குகளை சேகரிக்க சென்றுவரவுள்ளது.மக்களின் ஃபேவரெட் திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், பாடல் ஆகிய ஐந்து பிரிவுகளை நேயர்களே தேர்வு செய்வர். மீதமுள்ள பிரிபிரிவுகளுக்கான விருதுகளை விழா நடுவர்கள் தேர்வுசெய்வர்.
மேலும் தமிழ்த்திரைப்படத்துறையில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு செவாளியர் சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டு வருகிறது. விஜய் விருதுகளைப் பொறுத்தவரையில் முக்கிய விருதுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவது வரவேற்கப்படும் விஷயமாகும். ஜூன் மாதம் இறுதியில் விஜய் விருதுகள் பிரம்மாண்ட விழா சென்னையில் நடிபெறவிருக்கிறது. விஜய் அவார்ட்ஸ் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம் புறப்படுவது, விஜய் அவார்ட்ஸ் ஒரு முன்னோட்டம் மே 30 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல் சொல்லியிருக்கிறார்கள்!.

ஷங்கருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் ?


எந்திரன் படக்கதைத் தொடர்பாக ‌தொடரப்பட்ட வழங்கில் இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளருக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கட்தில் ரஜினி, ஐஸ்வர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

வழக்கு மனுவில் ஆரூர் தமிழ்நாடன் கூறியிருப்பதாவது: “நான் 1996ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கதை இனிய உதயம் என்ற தமிழ் மாத இதழில் வெளியானது. இதே கதையை அந்த நிறுவனம் திக் திக் தீபிகா என்ற பெயரில் புத்தகமாக 2007ல் பிரசுரித்தது. அது புத்தக கண்காட்சிகளில் விற்பனையானது. அரசு நூலகங்களுக்கும் வாங்கப்பட்டன.

அந்த கதையை தழுவி இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார். எந்திரன் படத்தை பார்த்த என்னுடைய வாசகர்களும், நண்பர்களும், உங்களுடைய ஜூபிகா கதைக்கும், எந்திரன் படத்திற்கும் சில ஒற்றுமை உள்ளது என தெரிவித்தனர். பிறகு நானும் அப்படத்தைப் பார்தது அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடைய கதையை அப்படியே காப்பி அடித்து படம் எடுத்துள்ளனர். பாடல் காட்சிகளையும், கிராப்பிக்ஸ் காட்சிகளையும் சேர்த்துள்ளனர். எந்திரன் படத்தின் கதையை 1977 – 98ல் புத்தகத்தில் படித்துள்ளதாகவும், அதனை படமாக எடுக்க இருந்ததையும் இயக்குநர் ஷங்கர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையடுத்து ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் மோசடி காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தேன். அந்த கதையின் காப்புரிமை என்னிடமே உள்ளதென்றும் என்னிடம் அனுமதி பெறாமல் படம் எடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினேன். ஆனால் தயாரிப்பாளர் பெயரை புகாரில் இருந்து நீக்கினால்தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று வாய்மொழியாக என்னிடம் தெரிவித்தனர். நான் மறுத்து விட்டேன். இதனால் புகார் முடித்து வைக்கப்பட்டது. எனவேதான் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளேன்” இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை 13வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சிவகுமார் விசாரித்தார். ஆரூர் தமிழ்நாடன் சார்பில் வக்கீல் எட்விக் ஆஜரானார். இந்த வழக்கில் ஜூன் மாதம் 24ம்தேதி இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Monday, May 30

எஸ்.ஏ.சி.க்கு இடைக்காலத் தடை

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைவர் பதவிக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

தமிழகத்தில் வந்த ஆட்சி மாற்றத்தால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளார் சங்கதிலும் மாற்றம் ஏற்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக இருந்த இயக்குநர் இராம.நாராயணன் தனது தலைவர் பதவியை ரா‌ஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் சங்க விதிகளுக்கு மாறாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை அவரது பதவிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தயா‌ரிப்பாளரும் இயக்குனருமான பாபு கணேஷ் சார்பில் நீதிமன்றத்தில் வழ‌க்குத் தொடர‌ப்ப‌ட்டது.

இந்த வழ‌க்கை ‌விசா‌ரித்த நீதிமன்றம், தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடர இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ரசிகர்களுக்கு நன்றி கூறிய விஜய்!

அதிமுக விற்கு ஆதரவாக தேர்தல் களட்தில் பணியாற்றிய, வாக்களித்த தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் விஜய்.

சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் விஜய் பேசியதாவது: “நமது இயக்கம் அதி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கடுமையான உழைப்பை பாராட்டிய போது எனக்கு பெருமையாக இருந்தது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது.
இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.

இனி மேலும் சமூக நலப்பணியை தொடர்ந்து செய்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தி, ஜெயலலிதாவின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும், விவேகத்தோடும் பணியாற்றுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில்” என்றார் விஜய்.

விஜய் - பாவனா இணையும் பகலவன்!

வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்க இருக்கும் "பகலவன்" படத்தில் அவருக்கு ஜோடியாக பாவனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, தம்பி, வாழ்த்துகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய சீமான் அடுத்து, விஜய்‌யை வைத்து "பகலவன்" என்ற படத்தை இயக்குகிறார்.


இப்படம் கடந்த ஆண்டே துவங்க இருந்தது. ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக அவதூறாக பேசியதற்காக சிறை சென்றார் சீமான். இதனால் இப்படம் தள்ளிபோனது. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த சீமான், விஜய்யை சந்தித்து "பகலவன்" படம் தொடர்பாக பேசினார். அவரும் படத்தை துவங்கலாம் என்று சொன்னார்.

ஆனால் இடையில் தமிழ சட்டசபை தேர்தல் வந்ததால், காங்கிரஸ்க்கு எதிராக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார் சீமான். இதனால் மீண்டும் தள்ளிபோனது பகலவன். இப்போது எல்லா வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டு, பகலவன் படத்திற்கான வேலையை துவங்கி இருக்கிறார் சீமான்.

முதற்கட்டமாக படத்திற்கான நாயகி மற்றும் தொழில் நுட்ப வல்லுனர் தேர்வில் இறங்கியுள்ளார் சீமான். பகலவனில் இரண்டு நாயகிகள். இதில் ஒருவராக பாவனாவை தேர்வு செய்திருக்கிறார் சீமான்.

பாவனா ஏற்கனவே சீமானின் வாழ்த்துகள் படத்தில் நடித்திருப்பதால் மீண்டும் அவரையே தேர்வு செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக ஹன்சிகா மொத்வானி நடிப்பார் எனத் தெரிகிறது. தற்போது விஜய் "வேலாயுதம்" படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கிலும், நண்பன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் பகலவன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய்யுடன், பாவனா நடிப்பது இதுவே முதல்முறை, அதேசமயம் சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, May 29

ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த தீடீர் விருந்து

சென்னை வடபழனியில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் நேற்று மாலை 7 மணி ஆளவில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை திடீரென சந்தித்தார்.

தமிழகமெங்குமிருந்து ஊராட்சி, ஓன்றிய, நகர, மாவட்ட இளைஞரணியைச் சேர்ந்த தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஐ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் “ தவறு செய்த குடும்ப ஆட்சி ஆகற்றப்பட்டு புரட்சித் தலைவி ஆம்மா ஆவர்களின் நல்லாட்சி ஆமையவேண்டும் என்பதற்காக, நமது இயக்கம்.ஆ.தி.மு.க.தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன்.

நீங்கள் பல்வேறு ஆரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளையெல்லாம் தூக்கி ஏறிந்துவிட்டு, என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஆம்மாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த ஊங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா ஆவர்களின் பொற்கால ஆட்சி ஆமைய, நாமும் ஒரு அணியாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி ஆடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு உங்களது கடுமையான உழைப்பைப் பாராட்டியபோது எனக்குப் பெருமையாக இருந்தது.

மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது.

இலங்கைத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை மாணவ மாணவிகளுக்குகம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.

இனி மேலும் சமூக நலப்பணியைத் தொடர்ந்து செய்து, மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஆவர்களின் கரத்தை வலுப்படுத்தி, அவர்களின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஓளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும் விவேகத்தோடும் பணியாற்றுங்கள்.

நாளைய உலகம் உங்கள் கையில்” இவ்வாறு விஜய் பேசினார். ஏஸ்.ஐ.சந்திரசேகரன் பேசும்போது இந்த நிழ்ச்சியில், நமது இயக்கத்த்தின் நற்பணி மன்றத் தலைவராக இருந்த சி.ஜெயசீலன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை அறித்தார்.

அ.இ.ஆ.தி.மு.க.கூட்டணி ஆமோக வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரான சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஆனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்தார் விஜய். இந்தக்கூட்டத்துக்கு மீடியாவுக்கு அழைப்பில்லை.

இளைய தளபதி விஜய் மற்றும் இராதிகா சித்சபேசன் பேசுகிறார்!!

எட்டிக் களை பறிக்கும்
இடமெல்லாம் நிற்கேனோ?
கட்டி மண்ணை நீ உடைக்கக்
கைத் தடியாய் ஆகேனோ?
ஏறுகின்ற வெயில் தணிக்க
இன்னிழலாய்த் தழுவேனோ?
மீறுகின்ற காதலுடன்
நம்மொழி பேச வாராயோ??
--கவிஞர் தூரன்

வட அமெரிக்கத் தமிழரெலாம் கூடி,தம் மொழி பேசிக் களித்து இன்புற்றிருத்தலோடு அவர்தம் கட்டமைப்புக்கும் வலுச் சேர்க்குமுகமாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது ஆண்டுதோறும் தமிழ் விழாக் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே.

பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழாவானது, எதிர்வரும் யூலை மாதம் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்களின்போது, தென் கரோலைனா மாகாணம், எழிலார்ந்த கடற்கரை நகரமாம் சார்ல்சுடன் நகரில் நடைபெற உள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரும், தமிழ்ப் பண்பாட்டை அமெரிக்க மண்ணில் நிலைநாட்டுவதற்கு அயராது உழைத்து வரும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தாரும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை மிக விமரிசையாகச் செய்து வருகிறார்கள்.

வெளியூர்களில் இருந்து வருவோர்க்கு ஏதுவான தங்குமிடங்கள், பசியாற உண்டி வழங்கல், குழந்தைகள் சக உறவினரோடு இருந்து மகிழ்ந்திடக் கூடங்கள், தமிழ்ச் சான்றோர்தம் விழுமியங்களை ஆய்ந்து பருகிட பல மேடைகள், குடும்பத்தார் இருந்து களித்திடப் பல பண்பாட்டு நிகழ்வுகள் என எண்ணற்ற கூறுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இத்திருவிழா.

திருவிழா இடம் பெறுகிற நகரமோ, ஒரு எழிலார்ந்த நகரம். நகரெங்கும் பச்சைப் பட்டுடத்திய புல்வெளிகள், வரலாற்றுப் பெருமை போற்றும் புராதனச் சின்னங்கள், அழகு கொஞ்சும் கடற்கரைகள், கண்களுக்கு விருந்தூட்டும் மீனகம் என ஏராளமான இன்னபிற அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதுதான் சார்ல்சுடன் நகரம்(Charleston, SC). இது ஒரு ஆகச் சிறந்த சுற்றுலாத்தளம் ஆகும்.

இவ்விழாவில், இளைய தளபதி விஜய், குணச்சித்திர நடிகர்நாசர் அவர்கள், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சித்சபேசன், கவிஞர் நா.முத்துக்குமார், பாடகர்கள்A.V.இரமணன், உமா இரமணன், பிரசன்னா, திண்டுக்கல் சக்தி நாட்டியக் குழுவினர், கானா பழனி, திருப்புவனம் ஆத்மநாதன், ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள், கோடைமழை வித்யா, புதுகை பூபாளம் குழுவினர் மற்றும் கனடிய, அமெரிக்க உள்ளூர்த் தமிழர்களும் இணைந்து, மூன்று நாட்களுக்குமாக பல நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

இவை மட்டுமல்லாது, இணை அமர்வுகளாக வலைஞர் சங்கமம், வணிகக் குமுகாயம், பல்வேறு பல்கலைக் கழக முன்னாள் மாணவர் கூடல், மருத்துவ ஆய்வு அரங்கம், தமிழ் அரசியலமைப்புக் கூட்டம் எனப் பல நிகழ்வுகளும் இடம் பெற உள்ளன. விழா குறித்த கூடுதல் தகவல்களுக்கு,பேரவை வலைதளம் மற்றும் விழா நறுக்கு ஆகியனவற்றைப் பாவிக்கவும்.

யூலை 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்கள் பெருவார ஈறு என்பதனால், ஒவ்வொரு தமிழரும் தத்தம் குடும்பத்துடன் வந்திருந்து தம்மையும் கட்டமைப்பையும் வலுப்பெறச் செய்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

விழாவில், திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள் வழங்க இருக்கும் விநாடி வினா, கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தலைமை ஏற்று, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம் எனும் தலைப்பில் இடம் பெற இருக்கும்கவியரங்கம், மரியாதைக்குரிய ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் நடுவராக இருந்து, தமிழைச் சிதைப்பது ஊடகங்களா? பொதுமக்களா?? எனும் தலைப்பில் இடம் பெற இருக்கும்பட்டிமண்டபம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுடையோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் அவர்களின் தமிழ்ப் பணியினை நினைவு கூறும் விதமாக, பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாக அமைய இருக்கிற இத்திருவிழாவின் போது, எழில்நகரமாம் சார்ல்சுடன் நகரில் உங்களை எல்லாம் சந்தித்து இன்புறக் காத்திருக்கிறோம். தமிழால் இணைந்தோம்! நட்பு பாராட்டுவோம்!! வாரீர், வாரீர்!!!

பணிவுடன்,
பழமைபேசி,
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைப் பிரதிநிதி,
அரசி நகரத் தமிழ்ச் சங்கம்.

அழகான ஹன்சிகா மோத்வானி படங்கள்!

மாப்பிள்ளை படத்தில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி எங்கேயும் காதல் படத்தில் நடித்து இருக்கிறார்.
இப்போது
விஜய் உடன் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்
இன்னொரு நமீதா என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்கும் அளவுக்கு கொழுக்மொழுக் என்று இருக்கும் ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் பெருகிவருகிறார்கள்.
அதனால், ஹன்சிகா கொஞ்சம் உடலைக் குறைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் போரடிக்குது ஆளை மாத்துப்பா என்பார்கள் கோடம்பாக்கத்து கோவிந்தசாமிகள்! அழகாய் இருக்கிறாய்; பயமாய் இருக்கிறது! என்று சொல்வார்கள்...



அழகான ஹன்சிகா படங்கள்





























இடுப்பழகி இலியானா படங்கள்!

பெண்களை ரசிப்பதில் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு ரசிப்புத் தன்மை உண்டு. ஆனால், இந்தியர்கள் பெண்களிடம் எல்லா விஷயத்தையும் ரசிப்பார்கள். அதில் மத்திய ஸ்தானமான இடுப்புக்கு முக்கிய பங்கு உண்டு.

அதனாலேயே கோயில்களில் உள்ள பெண் சிற்பங்களில்கூட இடுப்பை அழகாக கலை நுணுக்கத்தோடு ரசித்து வடித்து இருப்பார்கள். பெண் சிற்பங்களை வடிப்பதில் இந்திய சிற்பிகள் ரொம்பவே கில்லாடிகள். இந்திய சிற்பக் கலைகளில் கோஹினூர் சிற்பங்கள் எவ்வளவு பிரசித்தமானது என்று சொல்லத் தேவையில்லை. அவை நேரடியாக காமத்தை செப்புவதாக இருந்தாலும் அவற்றிலுள்ள கலை நுணுக்கங்களை யராலும் மறுக்கமுடியாது. அந்த அளவுக்கு நம்முடைய கோயில்களில் கலைக்கும் காமத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் காசு அதிகம் செலவு வைப்பதால் கோயில்களில் சிற்பங்களை செதுக்குவது இல்லை. சிமெண்ட் பொம்மைகளுக்கு பெயிண்ட் அடித்து அழகு பார்க்கிறார்கள். ஆனால், நம்முடைய மன்னர்கள் செதுக்கிவைத்த கற்சிற்பங்களுக்கு ஈடாகுமா இந்த வர்ணச் சிற்பங்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். ஒன்றில் போனாலும் இன்னொன்றில் பிடித்துவிடுவது நம்முடைய வழக்கமாயிற்றே... அப்படி கோயில்களில் சிலைகளை வைத்தவர்கள், இப்போது தமிழ் சினிமாவிலும் சிலை வடிவான பெண்களுக்கு வாய்ப்பளித்து தங்கள் ரசனைக்கு தீனிபோட்டுக் கொள்கிறார்கள். அந்த வரிசையில் சிம்ரன் (நேருக்கு நேர் படத்தில்), ஸ்ரேயா, ஜெனிலியா, தமன்னா, இலியானா எல்லாம் இடுப்பழகுச் சிலைகள்.

இதோ இடுப்பழகி இலியானா...





















Related Posts Plugin for WordPress, Blogger...