முன்பெல்லாம் தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம், அதை செய்ய மாட்டேன், இதை செய்ய மாட்டேன், இப்படித்தான் நடிப்பேன் என முரண்டு பிடித்ததால் சில ஹிட் பட வாய்ப்புகளை தவறவிட்டார். உதாரணத்திற்கு கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் வெளியான ‘கோ’, ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நண்பன்’ ஆகிய படங்களை சொல்ல்லாம். இந்நிலையில் இயக்குநர் அமீர், கதை சொல்ல சிம்புவை சந்தித்தார். கதையைப் பொறுமையாகக் கேட்ட சிம்பு, இடையிடையே சில திருத்தங்களைச் சொன்னாராம். அமீரும் செய்து விடலாம் என்று கதையினை சொல்லியிருக்கிறார். கதையைச் சொல்லி முடித்ததும் அடுக்கடுக்கான நிபந்தனைகளை சிம்புவுக்கு விதித்தாராம் அமீர். சிம்புவும் ‘கதை பிடித்திருப்பதால் இதை ஒப்புக் கொள்கிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார். இதற்கு இரு காரணங்கள் இருக்கிறது என கோலிவுட் கிசுகிசுக்கிறது. முதல் காரணம் ஷங்கரின் நண்பன் பட கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் சொன்னவர், திடீரென்று நடிக்காமல் விலகிக் கொண்டது. இரண்டாவது காரணம் நல்ல கதையை நழுவ விட்டால் நாம பிழைக்க முடியாது என நினைப்பது என கிசுகிசுக்கிறதாம்.
Tuesday, May 31
சிம்புவிற்கு கண்டிஷன் போட்ட இயக்குனர் அமீர்!
1:12:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment