டைரக்டர் ஷங்கருக்கு கோர்ட் சம்மன்?
எழுத்தாளர் தமிழ்நாடன் என்பவர் டைரக்டர் ஷங்கர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
2006ல் நான் ஜூகிபா என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதினேன். அதை ஒரு பிரசுரத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டு பின்னர் 2007ல் புத்தக கண்காட்சியில் இடம்பெற்றது.இந்நிலையில் அதே கதையில் டைரக்டர் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இதையடுத்து எந்திரன் படத்தை தயாரித்தவர் மீதும், இயக்கிய ஷங்கர் மீதும் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தேன். ஆனால் தயாரிப்பாளரின் பெயரை நீக்கினால்தான் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் வாய்மொழியாக என்னிடம் கேட்டனர். அதற்கு நான் மறுத்து விட்டேன். இதனால் புகார் முடித்து வைக்கப்பட்டது. அதனால்தான் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு 23வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சிவகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் இதுகுறித்து விசாரித்து, அடுத்த மாதம் 24-ந்தேதி டைரக்டர் -ஷங்கர், தயாரிப்பாளர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளார்.ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளார்.
Saturday, May 28
டைரக்டர் ஷங்கருக்கு கோர்ட் சம்மன்?
10:37:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment