'சிறுத்தை' படத்தை அடுத்து கார்த்தி நடித்து வரும் படம் 'சகுனி'. இப்படத்தை சங்கர் தயாள் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் நாயகிகள் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று கார்த்திக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் ஆகி இருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் "எனக்கு கார்த்தியுடன் நடிக்க ஆசை தான். ஆனால் 'சகுனி' படத்திற்காக என்னையும் இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார் ஸ்ரேயா.
அதுமட்டுமல்லாது தனது டிவிட்டர் இணையத்தில் " அஜீத், சிம்பு ஆகியோரை சந்தித்து இருக்கிறேன். ஆனால் அவர்களுடன் இன்னும் இணைந்து நடிக்கவில்லை. தனுஷ் எனக்கு நெருங்கிய நண்பர். நான் தீவிரமான் விஜய் ரசிகை " என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஸ்ரேயா ஜீவாவிற்கு ஜோடியாக 'ரெளத்திரம்' படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
Thursday, May 26
நான் தீவிரமான விஜய் ரசிகை ஸ்ரேயா
10:01:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment