இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, May 14

அப்பாவுடன் போயஸ் கார்டனுக்கு விரைந்த விஜய்

Vijay, S.A. Chandrasekar presenting a bouquet to Jayalalitha

காவலன்' படத்திற்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அராஜக திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தமிழ் திரையுலகையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், என்றெல்லாம் விஜய் ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக முன்னணியில் இருப்பதையறிந்து மகிழ்ச்சியடைந்த நடிகர் விஜய் உடனடியாக தனது தந்தை எஸ்.ஏ.சி.,யுடன் போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த விஜய், பின்னர் அளித்த பேட்டியில், ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினார்கள். மக்களின் விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இத்தனை பெரிய மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதா அம்மாவுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சமயத்தில் என் மன்றங்களை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட தலைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக மக்கள் இயக்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு, முக்கியமாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார். இந்த உறவாச்சும் நீடிக்குமா...?



0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...