
ஷங்கரை பொருத்தவரை மக்கள் அறிந்து வைத்துக்கொண்டிருப்பது பிரம்மாண்டமான இயக்குனர் என்பதுதான் முதல் பிறகுதான் புதுமை, டெக்னிக்கல் போன்ற மற்றதெல்லாம். பாடல்களில் பிரம்மாண்டம் காட்ட முடியும் என்பதை உணர்த்தியவர் என்றும் இவரை சொல்லலாம், பழைய படங்களில் பாடல்களில் பிரம்மாண்டத்தை காட்டியிருந்தாலும் தற்போதைய ட்ரெண்டிற்கு ஷங்கர் மட்டுமே பாடல்களில் கூட பிரம்மாண்டத்தை காட்டுவதற்காக மெனக்க்கெடும் இயக்குனர் என்று சொல்லலாம். இவரின் படங்களில் வரும் பாடல்களின் பட்ஜெட்டில் இவர் தயாரிக்கக்கூடிய ஒரு படத்தையே எடுத்துவிடலாம் (உதாரணம்: வெயில், காதல் போன்ற படங்கள்) இப்படிப்பட்ட இயக்குனர் 3இடியட்ஸ் படத்தை அப்படியே எடுப்பாரா அல்லது தன்னுடைய பாணிக்காக மாற்றம் செய்வாரா என்பதுதான் சினிமா ஆர்வலர்களின் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
ஒரு பாட்டில் ஒரு தெருவையே கலர் ஃபுல்லாக மாற்றுவது, ஐந்து கிமீ தார் சாலைக்கு பெயின்ட் அடிப்பது, லாரிலை மனிதர்கள் போல் மாற்றுவது, மேஜிக் போல் க்ராஃபிக்ஸ் காட்சிகளை பாடல் காட்சிகளில் காட்டுவது என்று பல்வேறு விசயங்கள் தான் ஷங்கரின் முத்திரை ஆனால் அது போல் நண்பன் படத்தில் செய்தால் படத்தின் தீம் கெட்டுவிடும் அதற்காக ஒரிஜினல் 3 இடியட்ஸ் படத்தை அப்படியே எடுத்தால் ஷங்கர் என்ற மாபெரும் இயக்குனருக்கு வேலை இல்லாமல் செய்தது போல் ஆகிவிடும் இந்த இரண்டு விசயங்களையும் தாண்டி ஷங்கர் மிகச்சிறப்பாக நண்பண் படத்தை வெளிக்கொண்டு வருவார்.
Sunday, May 8
ஷங்கரின் நண்பண் ஒர்க் அவுட் ஆகுமா?
3:41:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment