

இதனால் ஜெயலலிதாவுக்கு வருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு வேலாயுதம் இசைவெளியீட்டுக்கு வர சம்மதித்துவிட்டாராம். இதனால் ஜூன் 9-ஆம் தேதி வேலாயுதம் இசை வெளியீட்டை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் கிடைக்கிறது. தற்போது வேலாயுதம் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டிவிக்கு தர முன்வந்திருக்கிறார் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
ஒருவேளை திமுக ஜெயித்திருந்தால் விஜயை கலைஞருடன் சமாதனம் செய்து வைக்கத் திட்டம் போட்டிருந்தாராம் அவர். இப்போது அதற்கு வேலையில்லாமல் போய்விட்டது.
ஒருவாரத்துக்கு முன்பே மூன்றுவிதமான டிரைலர்களை ரெடி செய்து வைத்திருந்த எஸ்.ஏ.சி, நேற்றுகாலை அதிமுக முன்னணி என்று தெரிந்ததுமே ஜெயா டிவியில் உடனடியாக டெலிகாஸ்ட் செய்யும்படி சிக்னல் கொடுத்தாராம். இந்த டிரைலர்களை தொடர்ந்து இசைவெளியீடு வரை ஒளிபரப்ப மூன்று வாரங்களுக்கு 15 லட்சம் பேக்கேஜாக பேசி ஒரே பேமண்டாக நேற்றே கொடுத்து அதிரடி செய்தார்களாம்.
Saturday, May 14
ஜூன் 9-ஆம் தேதி வேலாயுதம் வெளியீட்டு விழா
8:48:00 AM
No comments
நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளித்தார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். ஆனால் விஜய் நேரடியாக பிரசாரத்துக்கு வரவில்லை. ஜெயா டிவிக்கு தேர்தல் நேரத்தில் வாய்ஸ் தர சம்மதித்த விஜய் கடைசி நேரத்தில் அப்பாவின் அட்வைஸ்படி பின்வாங்கினாராம்.
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment