இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Sunday, May 22

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு முறைப்படியான தேர்தல்: போட்டி குழு வலியுறுத்தல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரை முறைப்படியான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என போட்டி குழு வலியுறுத்தியுள்ளது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த இராம.நாரயணன், செயலாளராக இருந்த சிவசக்தி பாண்டியன் ஆகியோர் ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து ஏற்கெனவே செயல்பட்டு வந்த செயற்குழு, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனை தலைவராக அறிவித்தது. இதற்கு தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தலைமையிலான சில உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

சங்கத்தில் ரூ.20 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாகவும், அதை மறைக்கவே அவசர அவசரமாக எஸ்.ஏ. சந்திரசேகரனை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக கே.ஆர்.ஜி. தலைமையிலான போட்டி குழு புகார் தெரிவித்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு முறைப்படியான புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று புதன்கிழமை நடந்த அவசர கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து வரும் 20-ம் தேதி மீண்டும் கூட்டம் நடக்கிறது. இதில் கே.ஆர்.ஜி., கேயார், பஞ்ச அருணாச்சலம், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...